மத்திய திரைப்பட தணிக்கைத் துறை உறுப்பினர்களாக வித்யா பாலன், கௌதமி, ஜீவிதா நியமனம்

மத்திய திரைப்பட தணிக்கைத் துறை உறுப்பினர்களாக நடிகைகள் வித்யா பாலன், கௌதமி, ஜீவிதா ராஜசேகர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய திரைப்பட தணிக்கைத் துறை உறுப்பினர்களாக வித்யா பாலன், கௌதமி, ஜீவிதா நியமனம்

மத்திய திரைப்பட தணிக்கைத் துறை உறுப்பினர்களாக நடிகைகள் வித்யா பாலன், கௌதமி, ஜீவிதா ராஜசேகர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய திரைப்பட தணிக்கை துறையின் தலைவராக இருந்த பஹலாஜ் நிஹலானியை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நீக்கியது. அவருக்குப் பதிலாக அந்தப் பதவியில் பிரபல பாலிவுட் திரையுலக பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டார். அண்மையில் வெளியான பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கரின் இந்து சர்க்கார் திரைப்படத்தில் காட்சிகளை தணிக்கை செய்தது, லிப்ஸ்டிக் அண்டர் மை பர்க்கா திரைப்படத்தை திரையிட அனுமதியளிக்க மறுத்தது ஆகிய விவகாரங்களால் மத்திய திரைப்பட தணிக்கை துறைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுபோன்ற விமர்சனங்களின் காரணமாகவே, பஹலாஜ் நிஹலானி நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமன்றி, பஹலாஜ் நிஹலானி தலைமையில் செயல்பட்ட மத்திய திரைப்பட தணிக்கை துறையில் உறுப்பினர்களாக இருந்தவர்களையும் நீக்கிவிட்டு, அந்தப் பதவிக்கு புதியவர்களை மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை நியமித்துள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "மத்திய திரைப்படத் துறை உறுப்பினர்களாக வித்யா பாலன், கௌதமி, நரேந்திர கோலி, நரேஷ் சந்திர லால், நெயில் ஹெர்பர்ட், விவேக் அக்னிஹோத்ரி, வாமன் கேந்த்ரே, டி.எஸ். நாகாபரணா, ரமேஷ் பதங்கே, வானி திரிபாதி திகு, ஜீவிதா ராஜசேகர், மிகிர் பூடா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வித்யா பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய திரைப்ப ட தணிக்கை துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது; உறுப்பினர் என்ற முறையில், எனது பொறுப்புகளை திறம்பட செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com