நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்

பிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் (77) மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்

பிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் (77) மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
சிறு வயது முதலே மேடை நாடகங்களில் நடித்து வந்த சண்முகசுந்தரம், 1963-ஆம் ஆண்டு ரத்ன திலகம், கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்வைத் தொடங்கினார். பள்ளி, கல்லூரி நாள்களில் நடிப்பில் ஆர்வம் கொண்டு, மேடை நாடகங்களில் நடித்தவாறே, சினிமாக்களிலும் நடித்து வந்தார்.
1972-ஆம் ஆண்டு வெளிவந்த ''வாழையடி வாழை'' படம் இவருக்கு திரைத் துறையில் நல்ல அடித்தளத்தை அமைத்துத்தந்தது. கரகாட்டக்காரன், கிழக்கு வாசல், நம்ம ஊரு ராசா, நண்பன், அச்சமின்றி உள்பட 100-க்கும் அதிகமான படங்களில் நடித்து தனது இயல்பான நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். சிம்பு நடித்து கடந்த மாதம் வெளிவந்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் இவருடைய கடைசிப் படம். அண்ணாமலை, அரசி, செல்வி, வம்சம் என சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து பிரபலமானார். சிவாஜி கணேசன் தொடங்கி இன்றைய நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்தவர் சண்முகசுந்தரம்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசைக் குழுக்களிலும் இணைந்து பாடகராகவும் இருந்துள்ளார்.
இன்று இறுதிச் சடங்கு: சென்னை மயிலாப்பூர், டாக்டர் ரங்கா தெருவில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இறுதிச் சடங்குகள் மயிலாப்பூர் மின் மயானத்தில் புதன்கிழமை (ஆக.16) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com