ராஜீவ் மேனன் படத்துக்காக நா. முத்துக்குமார் கடைசியாக எழுதிய பாடல்!

ராஜீவ் மேனன் படத்துக்காக நா. முத்துக்குமார் கடைசியாக எழுதிய பாடல்!

அதுதான் அவருடைய கடைசிப் பாடல். அவர் மறைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு எழுதிக்கொடுத்தார்...

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாளமயம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்கள்.

இந்தப் படத்துக்காக நா.முத்துக்குமார் எழுதியதுதான் அவருடைய கடைசி பாடல். 

இதுகுறித்து இயக்குநர் ராஜீவ் மேனன் கூறியதாவது: அதுதான் அவருடைய கடைசிப் பாடல். அவர் மறைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு எழுதிக்கொடுத்தார் என்றார். 

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் (41) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த முத்துக்குமார் மருத்துவமனையில் அதற்குரிய சிகிச்சை எடுத்து வந்தார். நோயின் தாக்கம் அதிகரித்தன் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது. கவிஞர் முத்துக்குமாருக்கு மனைவி தீபலஷ்மி, மகன் ஆதவன், மகள் யோகலஷ்மி ஆகியோர் உள்ளனர்.

சீமான், தன் இயக்கத்தில் வெளிவந்த "வீரநடை' படத்தின் மூலம் நா.முத்துக்குமாரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில் "காதல் கொண்டேன்' படத்துக்காக அவர் எழுதிய - தேவதையை கண்டேன், தொட்டு தொட்டு போகும் தென்றல் என அனைத்துப் பாடல்களும் முத்துக்குமாருக்கு தனித்த அடையாளத்தைக் கொடுத்தன. தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதிய நா.முத்துக்குமார் தமிழ் திரையுலகில் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். தமிழ் திரைப்பாடல் உலகில் தனக்கென தனி இடம் கொண்டு விளங்கிய நா.முத்துக்குமார், கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பாடல் எண்ணிக்கையில் முதலிடம் பெற்று திகழ்ந்தார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பாடல்களுக்கு மேல் எழுதி முன்னணி பாடலாசிரியராக விளங்கினார்.

இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா, வித்யாசாகர், டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார், அனிருத் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அழகே அழகு (சைவம்) மற்றும் ஆனந்த யாழை (தங்க மீன்கள்) ஆகிய பாடல்களுக்காக இரு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com