மிர்ச்சி சிவாவின் நடிப்பில், தமிழ் படங்களை கேலி செய்து ஒரு தமிழ் படத்தை, தமிழ் படம் என்ற பெயரிலேயே ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் இயக்கினார் சி.எஸ்.அமுதன். அந்தப் படம் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அமுதன் இயக்கிய அவரது இரண்டாம் படத்தின் பெயர் ‘இரண்டாம் படம்’ (இப்படம் இன்னும் வெளிவரவில்லை).

இப்படி தலைப்புக்களில் வித்யாசத்தைக் காட்டும் அமுதனின் மூன்றாவது படத்தின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. காரணம் தமிழ்படத்தின் 2-ம் பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் பெயர் ‘தமிழ்படம் 2.0’( சி.எஸ் அமுதனின் அடுத்த படத்தின் பெயர் நான்காவது படமா?).

சஷிகாந்த் தயாரிக்கும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, நிழல்கள் ரவி, சந்தான பாரதி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், சேத்தன், சதீஷ், ஜார்ஜ், OAK சுந்தர், அஜய் ரத்னம், திஷா பாண்டே, கலைராணி, ஐஸ்வர்யா மேனன், ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் போஸ்டரில் தமிழ் படம் 2.0-வின் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டு, தமது ஆன்லைன் திருட்டு பங்குதாரர்களாக தமிழ் ராக்கர்ஸ் குழுவினருக்கு சவால் விடும் விதமாக களம் இறங்கியுள்ளனர். இப்படம் மே 25-ல் படம் வெளியிடப்படும் எனவும், இதன் ஆன்லைன் பைரசி பார்ட்னரான ‘தமிழ் ராக்கர்ஸ்’ அடுத்த நாளில், அதாவது மே 26-ல் படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்பது போன்று இந்த லோகோ அமைந்துள்ளது.

இந்த பட அறிவிப்பைக் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை டிசம்பர் 12 காலை 9 மணிக்கு அறிவிப்பார் என தெரிவித்திருந்தார். எல்லாமே இனிமே ஒரு மாதிரி தான் நடக்கும். 'தமிழ்படம் 2.O' வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிடுவதில் சந்தோஷப்படுகிறேன் என்று குறிப்பிட்டு இந்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் சித்தார்த்.
பெயர் மற்றும் போஸ்டர் அறிவிப்பிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள தமிழ் படம் 2.0-வின் படப்பிடிப்பு டிசம்பர் 11-ம் தேதி சென்னையில் தொடங்கவிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் இப்படத்தில் சமீபத்திய போஸ்டர் முதல் அனைத்து செய்திகளும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெளிவரும் தினத்தில் தமிழ் ராக்கர்ஸ் எதிர்வினை எப்படியிருக்குமோ என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

21,000 ஊழியா்களை பணிநீக்கம் செய்த ஆரக்கிள்!
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் டிரைலர்!
பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை! இன்றைய செய்திகள் ஜூன் 23 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



