யாரோ ஒருவர் சொல்லி திரைப்பட மானியத்தை மாநில அரசு நிறுத்துமா? விஷால் பதிலடி! 

யாரோ ஒருவர் சொல்வதன் மூலமாக திரைப்பட மானியத்தை மாநில அரசு நிறுத்தி விடுமா என்று எதிர்ப்பாளர்களின் விமர்சனத்திற்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பதிலளித்துள்ளார்.
யாரோ ஒருவர் சொல்லி திரைப்பட மானியத்தை மாநில அரசு நிறுத்துமா? விஷால் பதிலடி! 

சென்னை: யாரோ ஒருவர் சொல்வதன் மூலமாக திரைப்பட மானியத்தை மாநில அரசு நிறுத்தி விடுமா என்று எதிர்ப்பாளர்களின் விமர்சனத்திற்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பதிலளித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால் கூறியதாவது:

மிகுந்த தடைகளுக்கு மத்தியில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் தற்பொழுது  நடந்து முடிந்துள்ளது. நிகழ்வின் நடுவே சிலர் குழப்பத்தை உண்டாக்கினார்கள்.பேசுபவர்களின் மைக்கைப் பிடுங்குவது மூலம், அவர்களைத் தள்ளி விடுவதன் மூலம், தடுப்பதன் மூலம் என பல்வேறு விஷயங்கள் நடந்தன. 

முதலில் நான் தமிழ்நாடு காவல்துறைக்குதான் நன்றி கூற வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு அளித்ததுடன் நிகழ்வு சரியாக நடந்து முடிய அவர்களே உதவினார்கள். ஆனால் இந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் தவிர்த்திருக்கலாம்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக வங்கி வைப்பு நிதியில் இருந்த ரூ.7 கோடி ரூபாய் பணத்தில் மோசடி நடந்து விட்டதாக கேள்விகள் எழுப்புபவர்கள், ஊடகங்களிடம் பேசுவதை விடுத்து, நேரடியாக அலுவலகத்துக்கு  வந்து ஆய்வு செய்து உண்மையினைத் தெரிந்து கொள்ளலாம்.

சங்கப் பதவியில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று எந்த விதிமுறையிலும் இல்லை என்பதை தெளிவாகக் கூறுகிறேன்.  அனைத்தையும் பற்றி ஆலோசித்து விட்டுத்தான் நான் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தேன். அது என் தனிப்பட்ட முடிவு. சங்க விதிமுறைகள் பற்றி அடுத்த பொதுக்குழுவில் முடிவு செய்யபப்டும்.

இங்கு இருப்பவர்கள் யாரோ ஒருவர் சொலகிறார் என்பதற்காக 149 படங்களுக்கு மானியம் அளிப்பதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நிறுத்தி விடுமா என்ன? இதெல்லாம் அர்த்தமில்லாத குற்றச்சாட்டு.

யார் தடைகளை உண்டாக்கினாலும் தயாரிப்பாளர்களுக்கு செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை நாங்கள்  தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்போம்.

இவ்வாறு விஷால் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com