பிரபல நடிகையை காருடன் கடத்திச் சென்று துன்புறுத்தல்

பிரபல திரைப்பட நடிகையை காருடன் கடத்திச் சென்று 2 மணி நேரம் துன்புறுத்தல் அளித்த 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிரபல திரைப்பட நடிகையை காருடன் கடத்திச் சென்று 2 மணி நேரம் துன்புறுத்தல் அளித்த 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம், ஆலுவா-அங்கமாலி இடையே இருக்கும் அதானி எனுமிடத்தில் திரைப்படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு நடிகை தனது காரில் வெள்ளிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது கார் மீது மர்ம வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதையடுத்து நடிகை தனது காரை நிறுத்தியுள்
ளார்.
அப்போது அவரது காருக்குள் புகுந்த 5 பேர் கும்பல், வலுக்கட்டாயமாக அவரை காருடன் கொச்சிக்கு கடத்திச் சென்றது. அப்போது ஓடும் காரில் வைத்து நடிகையை துன்புறுத்திய அந்தக் கும்பல், அந்தக் காட்சியை புகைப்படமாகவும், விடியோவாகவும் பதிவு செய்தது.
2 மணி நேர பயணத்துக்குப் பிறகு நடிகையின் கார், கொச்சிக்கு வந்துள்ளது. அங்குள்ள பாலரிவட்டம் எனுமிடத்தில் நடிகையை காருடன் விட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பித்துச் சென்றுவிட்டது. இதையடுத்து திரைப்பட இயக்குநரும், நடிகருமான லாலின் வீட்டுக்கு நடிகை சென்றுவிட்டார்.
காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தல் அளிக்கப்பட்டது குறித்து, காவல்துறையிடம் நடிகை புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் மேற்கண்ட தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு கொச்சி, எர்ணாகுள காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக் குழுவை கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா அமைத்துள்ளார்.
கார் ஓட்டுநர் மீது சந்தேகம்: இந்தச் சம்பவம் குறித்து லோக்நாத் பெஹரா கூறுகையில், "இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர்; அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். இந்தச் சம்பவத்தில் நடிகையின் கார் ஓட்டுநருக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதனால், அவரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்' என்றார்.
யார் அந்த நடிகை?: அந்த நடிகையின் உண்மையான விவரம் தெரியவில்லை. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை பாவனாதான் என்று இணையதளத்தில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.
கேரள அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசுக்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com