தேசிய விருது கிடைத்தும் மாநில அரசின் விருதில்லையே!

தேசிய அங்கீகாரம் பெற்ற அந்தப் பாடலுக்கு மாநில அரசின் விருது மறுக்கப்பட்டுள்ளது...
தேசிய விருது கிடைத்தும் மாநில அரசின் விருதில்லையே!

தமிழ்த் திரைப்படத் துறையில் சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அறிவித்தார். 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான விருதுகளின் பெயர்ப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய விருது பெற்ற ஒரு பாடலுக்கு மாநில அரசின் அங்கீகாரம் கிடைக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2009 - 2014 காலக்கட்டத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களுக்கான அரசு விருதுகளில், சிறந்த பாடலாசிரியர்களுக்கான விருதைப் பெற்றவர்கள்.

2009 - யுகபாரதி
2010 - பிறைசூடன்
2011 - முத்துலிங்கம்
2012 - நா. முத்துக்குமார்
2013 - நா. முத்துக்குமார்
2014 - நா. முத்துக்குமார்

அடுத்தடுத்து 2013, 2014 ஆகிய வருடங்களில் நா. முத்துக்குமார் தேசிய விருதுகளைப் பெற்றார். இப்போது கூடுதலாக அப்பாடல்களுக்கு அரசு விருதுகளும் கிடைத்துள்ளன.

2011-ம் வருடம் தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்காக தேசிய விருது பெற்றார் வைரமுத்து. ஆனால் தேசிய அங்கீகாரம் பெற்ற அந்தப் பாடலுக்கு(கள்ளிக்காட்டில் பிறந்த தாயே) தற்போது மாநில அரசின் விருது மறுக்கப்பட்டுள்ளது. 

இதேபோல 2011-ம் ஆண்டு வெளிவந்த அழகர்சாமியின் குதிரை-யின் படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ஆனால் 2011-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது அவருக்குக் கிடைக்கவில்லை. அந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான விருது விமலுக்கும் சிறப்புப் பரிசு சிவகார்த்திகேயனுக்கும் சிறந்த குணச்சித்திர நடிகர் நாசருக்கும் கிடைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com