விரைவில் தொடங்கவுள்ள சண்டகோழி 2 படப்பிடிப்பு!

சண்டகோழி 2 படம் வருகிற ஆகஸ்ட் 31 முதல் ஆரம்பமாகும் என இயக்குநர் லிங்குசாமி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்...
விரைவில் தொடங்கவுள்ள சண்டகோழி 2 படப்பிடிப்பு!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சண்டகோழி 2 படம் கடந்த வருடம் ஆரம்பமாக இருந்தது. ஆனால் இந்தப் படத்தை ஆரம்பிப்பதற்குப் பதிலாகத் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைக் கொண்டு புதிய படத்தைத் தொடங்க இருந்தார் இயக்குநர் லிங்குசாமி. உடனே, தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் புகார் அளித்தார். இதனையடுத்து, சண்டகோழி 2 விவகாரம் தொடர்பாக விஷால் - லிங்குசாமி இடையே மோதல் எழுந்தது. பிறகு இருவரும் சமரசம் ஆனதால், சண்டகோழி 2 படத்தைத் தொடங்க முடிவெடுத்தார்கள்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டகோழி’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அப்படம் வெளியாகி 12 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்குசாமி - விஷால் ஆகிய இருவரும் மீண்டும் இணையவுள்ளார்கள்.

இந்நிலையில் சண்டகோழி 2 படம் வருகிற ஆகஸ்ட் 31 முதல் ஆரம்பமாகும் என இயக்குநர் லிங்குசாமி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா.  

பொங்கல் அன்று இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com