வீடுகள்தோறும் மரங்கள் வளர்ப்பது அவசியம்: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், வீடுதோறும் மாணவர்கள்மரங்களை வளர்ப்பது அவசியம் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வலியுறுத்தினார்.
வீடுகள்தோறும் மரங்கள் வளர்ப்பது அவசியம்: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், வீடுதோறும் மாணவர்கள்மரங்களை வளர்ப்பது அவசியம் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வலியுறுத்தினார்.

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு, "லிம்கா' சாதனை பதிவேட்டில் இடம்பெறும் நோக்கத்தில், "கிரீனத்தான்' என்ற பெயரில் தொடர்ச்சியாக 200 மீட்டர் நீளத்துக்கு விழிப்புணர்வு ஓவியத்தை மாணவர்கள் வரையும் நிகழ்ச்சி, சென்னை சிட்டி சென்டரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் நவீன்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.குமார் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்தி ஓவியங்களை வரைந்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது:

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பசுமையான மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. காற்றில் உள்ள நச்சுகாற்றை உள்வாங்கி, நாம் சுவாசிப்பதற்காக சுத்தமான ஆக்ஸிஜனை மரங்கள் வெளியிடுகின்றன.

தற்போதைய நிலையில், மழையில்லாததால் புவி வெப்பமடைந்து பசுமையின்றி உள்ளது. போதிய மரங்கள் இல்லாததே இந்த வெப்பத்துக்கு முக்கிய காரணம்.

எனவே மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலும், விளைநிலங்களிலும் மரங்களை வளர்க்க வேண்டும். இதனால், பறவைகள் மற்றும் விலங்குகளும் பயன்பெறும். அத்துடன், மரங்கள் மண் அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீரையும் பாதுகாத்து, மழை பொழியவும் துணை நிற்கும் என்றார் அவர்.

மரக் கன்றுகள் பரிசு: இந்த நிகழ்ச்சியில், போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரை கௌரவித்து, நினைவுப் பரிசுகளையும் அவர் வழங்கினார். "வண்ண ஓவியம் வரைதல்' நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com