இளையராஜாவின் நடவடிக்கை சட்டப்படி சரியானது: மதன் கார்க்கி

ராயல்டி விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் நடவடிக்கை சட்டப்படி சரியானது என்று பாடலாசிரியரும், கவிஞர் வைரமுத்துவின் மகனுமான மதன் கார்க்கி தெரிவித்தார்.
இளையராஜாவின் நடவடிக்கை சட்டப்படி சரியானது: மதன் கார்க்கி

ராயல்டி விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் நடவடிக்கை சட்டப்படி சரியானது என்று பாடலாசிரியரும், கவிஞர் வைரமுத்துவின் மகனுமான மதன் கார்க்கி தெரிவித்தார்.
இது குறித்து அவர் தன் சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை பதிந்துள்ள செய்தி: இந்த விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா செய்தது சட்டப்படி சரிதான். ஒரு பாடல் என்பது இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்குச் சொந்தமானதாகும்.
நட்பு ரீதியாக சரியானது அல்ல: இதை நட்பு ரீதியாகப் பார்த்தால், அது சரியில்லை. நோட்டீஸýக்கு பதிலாக ஒரு தொலைபேசி அழைப்பு எல்லா விஷயங்களையும் சுமுகமாகத் தீர்த்திருக்கும்.
எங்கெல்லாம் திரை அரங்குக்கு வெளியே ஒரு பாடல் பாடப்படுகிறதோ, அதற்கான ராயல்டி வசூலிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கு வழங்கப்படும்.
ஐபிஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் ராயல்டி தொகையை வசூலித்து அதை உரியவர்களிடம் வழங்கிவருகின்றன. அந்நிறுவனத்துக்கு இளையராஜா அனுமதி அளிக்காவிட்டாலும்கூட, அவரால் தன் பாடலுக்கான முழுத் தொகையையும் பெற முடியாது.
ஏன், இளையராஜாவே ஒரு பொது இடத்தில் தான் இசையமைத்த பாடல்களை அரங்கேற்றுகிறார் என்றால், அதற்கான ராயல்டி தொகையை பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கும் அளிக்க வேண்டும்.
இது குறித்து பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பும் பட்சத்தில், அவராலும் முன் அனுமதியின்றி பாடல்களை இசைக்க முடியாது. இந்தச் சம்பவம் பலருக்கும் கசப்பான அனுபவங்களைத் தந்திருந்தாலும், இதை இளையராஜா பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளார்.
இதன்மூலம் ராயல்டி குறித்து அனைவரும் புரிந்துகொள்ள முடியும் என்று மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com