"படம் எடுத்து நலிந்தோரை மீண்டும் தயாரிப்பாளராக்குவதே குறிக்கோள்'

படம் எடுத்து நலிந்தோரை மீண்டும் தயாரிப்பாளராக்குவதே குறிக்கோள் என விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் அணியினர் தெரிவித்தனர்.
திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகிறார் நடிகர்  விஷால்.
திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகிறார் நடிகர் விஷால்.

படம் எடுத்து நலிந்தோரை மீண்டும் தயாரிப்பாளராக்குவதே குறிக்கோள் என விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் அணியினர் தெரிவித்தனர்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையிலான அணி பல்வேறு ஊர்களுக்குச் சென்று, அங்குள்ள தயாரிப்பாளர்களை சந்தித்து வாக்கு கேட்டு வருகிறது.
திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த இந்த அணியில் இடம்பெற்றுள்ள நடிகர் விஷால், ஞானவேல்ராஜா, பிரகாஷ்ராஜ், மிஷ்கின் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியது:
சங்கத்தில் 1,212 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதுவரை நிர்வாகிகளாக இருந்தவர்கள், சொந்த விஷயங்களுக்காக சங்கத்தை பயன்படுத்தினார்களே தவிர, சங்க உறுப்பினர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும், உறுப்பினர்களுக்கு நன்மை செய்யவுமே எங்களது அணி போட்டியிடுகிறது. நாங்கள் அறிவித்துள்ள வாக்குறுதிகளை ஓராண்டுக்குள் நிறைவேற்றவில்லையெனில் அனைவரும் ராஜிநாமா செய்வோம்.
பல மூத்த தயாரிப்பாளர்கள் தற்போது கஷ்டத்தில் உள்ளனர். மலையூர் மம்பட்டியான் படத்தை தயாரித்த சிவராமதாஸ் மிகச் சிறிய இடத்தில் வசித்து வருகிறார். அவரைப் போல நலிந்தோரை மீண்டும் தயாரிப்பாளர்களாக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்.
நடிகர், நடிகைகள் அதிகமாக சம்பளம் வாங்குவதால்தான் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. நடிகர்கள் யாரையும் மிரட்டி சம்பளம் கேட்கவில்லை. எங்களது மார்க்கெட்டுக்கு தகுந்தபடிதான் சம்பளம் கேட்கிறோம்.
படத்தின் ஆரம்பம் முதல் வெளியீடு வரை ஆலோசனை வழங்க குழு அமைத்து செயல்படுவோம். அதன் பிறகு சம்பளம், நஷ்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். இனி படம் வெளியாவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்றனர் அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com