நடிகர் தனுஷின் உடலில் இருந்த மச்சம் "லேசர்' சிகிச்சை மூலம் அழிப்பு

நடிகர் தனுஷின் உடலில் இருந்த மச்சம் லேசர் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக, அவரது அங்க அடையாளங்களைச் சோதனையிட்ட மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நடிகர் தனுஷின் உடலில் இருந்த மச்சம் "லேசர்' சிகிச்சை மூலம் அழிப்பு

நடிகர் தனுஷின் உடலில் இருந்த மச்சம் லேசர் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக, அவரது அங்க அடையாளங்களைச் சோதனையிட்ட மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி, மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு, மேலூர் தம்பதியர் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், தனுஷ் தங்கள் மகன் தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன. அவரது இடது காரை எலும்பின் மேல் ஒரு மச்சமும், இடது முழங்கையில் ஒரு தழும்பும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து, மேலூர் தம்பதியர் குறிப்பிட்டுள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது என்று கூறி நடிகர் தனுஷை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்களை பதிவாளர் (நீதித்துறை) முன்னிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தலைமையிலான மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பான அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் தனி அறையில் திங்கள்கிழமை விசாரித்தார். அப்போது நடிகர் தனுஷின் உடலில் உள்ள அடையாளங்களைச் சோதனையிட்ட மருத்துவர்கள், அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
அதுகுறித்து மேலூர் தம்பதியர் தரப்பு வழக்குரைஞர் கூறுகையில், நடிகர் தனுஷின் இடது காரை எலும்பில் மச்சமும், இடது முழங்கையில் தழும்பும் இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு மச்சத்தை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியும். ஆனால், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் தழும்புகளின் அளவைக் குறைக்க முடியுவே தவிர அதை முற்றிலுமாக அகற்ற முடியாது.
நடிகர் தனுஷின் உடலில் மேலோட்டமாக இருந்த மச்சம், லேசர் சிகிச்சை மூலம் எவ்வித தடயமுமின்றி அகற்றப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதை டெர்மாஸ்கோப் கருவி மூலம் கண்டறிய முடியும். நவீன பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தழும்பின் அளவை மட்டுமே குறைக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், விசாரணையின் தகவல்களைக் கூற மறுத்த நிலையில், வழக்கு மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதை இருதரப்பு வழக்குரைஞர்களும் உறுதிப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com