2.0: பலவிதமான வேடங்களில் நடிக்கும் ரஜினி, அக்‌ஷய் குமார்!

எந்திரன் படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்தார். ஆனால்..
2.0: பலவிதமான வேடங்களில் நடிக்கும் ரஜினி, அக்‌ஷய் குமார்!

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.

2.0 படத்தின் முக்கியமான காட்சியைப் படமாக்கியுள்ளோம். இன்னும் ஒரு பாடல் மற்றும் சில சின்ன வேலைகள் மட்டும் உள்ளன என்று ஷங்கர் சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார். முழுப் படப்பிடிப்பும் முடிவடைந்த பிறகு இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் படத்தில் ரஜினி மற்றும் அக்‌ஷய் குமார் நடிக்கும் வேடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்திரன் படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்தார். ஆனால் 2.0 படத்தில் அவர் 5 வேடங்களில் நடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

அதேபோல அக்‌ஷய் குமார், 12 வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். அதில் ஒன்றுதான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com