வேலூரில் நடந்த கார் விபத்தில் கன்னட டிவி நடிகை மரணம்!

பெங்களூரைச் சேர்ந்த 22 வயது டிவி நடிகை ரேகா சிந்து, கார் விபத்தில் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
வேலூரில் நடந்த கார் விபத்தில் கன்னட டிவி நடிகை மரணம்!

வேலூர் மாவட்டம் - பேரணாம்பட்டு அருகே ஏற்பட்ட கார் விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த 22 வயது டிவி நடிகை ரேகா சிந்து உயிரிழந்தார்.

படப்பிடிப்புக்காக சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தபோது சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார். காலை 2.30 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

காரில் ஆறு பேர் இருந்துள்ளார்கள். கார் ஓட்டுநர் தூக்கத்தில் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. விபத்தில் மேலும் இருவருக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விபத்து குறித்து வேலூர் காவல்துறை விசாரணை செய்துவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com