விஸ்வரூபம் 2 பாடல்கள் குறித்து கமல் புதிய தகவல்!

விஸ்வரூபம் 2 குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் கமல்.
விஸ்வரூபம் 2 பாடல்கள் குறித்து கமல் புதிய தகவல்!

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இப்படத்தின் ஹிந்தி, தெலுங்குப் பதிப்புகளுக்கான டப்பிங் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் விஸ்வரூபம் 2 குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் கமல். அவர் கூறியதாவது: விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை. நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும் என்று கூறியுள்ளார். விஸ்வரூபம் 2 படத்தின் கடைசிப் பாடலை சமீபத்தில் ஒலிப்பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ள கமல், அப்பாடலைத் தான் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com