மாம் ஸ்ரீதேவி: நான்கு மொழிகளிலும் தானே டப்பிங்!

தாய்மொழியில் நடிக்கும்போது கூட இரவல் குரலைப் பயன்படுத்தும் நடிகைகள் பலர் உள்ளார்கள்.
மாம் ஸ்ரீதேவி: நான்கு மொழிகளிலும் தானே டப்பிங்!

இன்றைய இளம் நடிகைகளுக்கு இது சாத்தியமேயில்லை. தாய்மொழியில் நடிக்கும்போது கூட இரவல் குரலைப் பயன்படுத்தும் நடிகைகள் பலர் உள்ளார்கள். ஆனால் மாம் படத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவி, படம் வெளியாகவுள்ள நான்கு மொழிகளிலும் தானே டப்பிங் பேச முடிவெடுத்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் 300-வது படம் - மாம். 2017 அவருடைய திரையுலக வாழ்வின் 50-வது வருடம். 1967-ம் வருடம் ஜூலை 7-ம் தேதி துணைவன் படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமானார். அதே தினத்தில் மாம் படமும் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியாகும் மாம் படம், ஹிந்தியில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. இந்த நான்குப் பதிப்புக்கும் சொந்தக் குரலில் பேச முடிவெடுத்துள்ளார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி 2012-ல் வெளியான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com