உலகெங்கிலும் 2800 திரையரங்குகளில் வெளியாகியுள்ள சச்சின் படம்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.
உலகெங்கிலும் 2800 திரையரங்குகளில் வெளியாகியுள்ள சச்சின் படம்!

'சச்சின்: ஏ பில்லியன் டிரீம்ஸ்' - சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படம். ஜேம்ஸ் ஏர்ஸ்கின் இயக்கியுள்ள இந்தப் படத்தை, 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசை - ஏ.ஆர். ரஹ்மான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. 

சச்சினின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் சச்சின், கங்குலி, வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குறிப்பாக, சிறு வயது சச்சினாக நடித்துள்ளது, சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.

சச்சினின் பிறப்பு முதல் இந்தியாவுக்கான அவர் களம் புகுந்த மைதானம், வெற்றி, தோல்வி, காதல், திருமணம் என எல்லாவற்றையும் பிரபதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகப்பட்டுள்ளது. தோனி மற்றும் சேவாக் போன்றோரும் இந்த பயோகிராஃபியில் இடம்பெற்று, சச்சினைப் பற்றி சிலாகிக்கிறார்கள். கிரிக்கெட்டில் ஜென்டில்மேன் எனவும் மிஸ்டர் கிரிக்கெட் எனவும் போற்றப்படும் சச்சின், சிறுவயதில் குறும்புத்தனத்துக்கு பஞ்சம் வைக்காத பலே கில்லாடி. அந்த சம்பவங்கள் அனைத்தும் மிக யதார்த்தமாக இப்படத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. சச்சின் ஓய்வுபெற்று ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், கிரிக்கெட் என்றால் சச்சின்தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படம் குறித்து பேசியுள்ள சச்சின், "இந்த சினிமா, என் வாழ்க்கையில் நான் அனுபவித்த மிக முக்கிய கணங்களை மீண்டும் அசைபோடவைத்தது. நான் மிகவும் தனிமையான மனிதன். ஆனால், என் வாழ்க்கைக்கும் என் கிரிக்கெட் பயணத்துக்கும் துணையாக பலரை, குறிப்பாக ரசிகர்களைப் பற்றி நான் தெரியப்படுத்தியதோ அல்லது பேசியதோ இல்லை. ஆனால், இந்த சினிமா மூலம் அதைச் செய்திருக்கிறேன். இந்தப் படம், என் மீது அன்பு செலுத்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சச்சின் படம் இந்தியாவில் 2400 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 400 திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com