தெலுங்கு மெர்சல் நவம்பர் 9-ல் வெளியீடு!

தெலுங்கு மெர்சல் நவம்பர் 9-ல் வெளியீடு!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. இதனால் பெரும் சர்ச்சை உருவானது. எனினும், மெர்சல் படத்தின் வசூல் ரூ. 200 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பு - அதிரிந்தி (Adirindhi) முதலில் தீபாவளியன்றும் பிறகு அக்டோபர் 27 அன்றும் வெளிவருவதாக இருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இந்நிலையில், கடந்த 2-ம் தேதி, அதிரிந்தி படத்துக்குத்  தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. இதையடுத்து, நவம்பர் 9 அன்று அதிரிந்தி வெளிவரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com