பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் காலமானார்! 

தெனாலி, சாமி, திமிரு உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ப்ரியன்(53) இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.  
பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் காலமானார்! 

சென்னை: தெனாலி, சாமி, திமிரு உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ப்ரியன்(53) இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.  

தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்தவரான இவரின் இயற்பெயர் நாகேந்திரன். அவர் தன்னுடைய திரைப்பயணத்தை பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவி ஒளிப்பதிவாளராக துவக்கினார். அவருடன் முன்றாம் பிறை. சத்மா உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். அவரிடம் இருந்து விலகியவுடன் ராஜிவ் மேனன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தார்.

பின்னர் இயக்குநர் அதியமான் இயக்கத்தில் 1995-இல் வெளிவந்த 'தொட்டாச் சிணுங்கி' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பின்னர் கமலின் 'தெனாலி', விஜயின் 'வேலாயுதம்' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆனால் பிரபல ஆக்ஷன் இயக்குநர் ஹரியின் 14 படங்களிலும் அவருடன் இணைந்து ஒளிப்பதிவு செய்த அளவில் மிகவும் புகழ்பெற்றவர்.

இந்நிலையில் இன்று எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்ட அவர் காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com