இணையத்தில் படத்தை பார்த்துவிட்டுப் படத்தின் பெயரில் ரூ.650 தானம் செய்ய சொல்லிய தமிழ் தயாரிப்பாளர்!

இணையத்தில் கட்டணம் செலுத்திப் படத்தை பார்ப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா எனப் படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவிடன் குஜராத்தில் வசிக்கும் விஷாந்த் என்னும் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் கேள்வி எழுப்பி
இணையத்தில் படத்தை பார்த்துவிட்டுப் படத்தின் பெயரில் ரூ.650 தானம் செய்ய சொல்லிய தமிழ் தயாரிப்பாளர்!

கடந்த வெள்ளிக் கிழமை வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்திற்குத் தான் இருக்கும் பகுதியில் தமிழ் வசனங்களுக்கான ஆங்கில துணை தலைப்பு இல்லாமல் வெளியானதால் மொழி பிரச்னையால் படத்தைப் பார்க்க முடியவில்லை, அதனால் இணையத்தில் கட்டணம் செலுத்திப் படத்தை பார்ப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா எனப் படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவிடன் குஜராத்தில் வசிக்கும் விஷாந்த் என்னும் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் கேள்வி எழுப்பினார். இந்த திரில்லர் படத்தைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கார்த்தி நடித்து வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் பிரபுவின் ‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரித்து தமிழில் உலகமெங்கும் நவம்பர் 17 வெளியிட்டது. 

ரசிகர் கேட்ட இந்தக் கேள்விக்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் “இன்னும் ஒரு 25 நாட்கள் பொருத்து கொள்ளுங்கள் அதற்குள் ‘அமேசான் பிரைமில்’ இது வெளியாகும், அப்படி வெளியாகவில்லை என்றால் இணையத்தில் படத்தை பார்த்துவிட்டு, படத்தின் பெயரில் $10 (ரூ.650) பணத்தைத் தேவையானவர்களுக்கு தானம் செய்துவிடுங்கள், அதுவும் எனக்கு மகிழ்ச்சியே!” என்று பதிலளித்துள்ளார்.

தயாரிப்பாளரின் இந்தப் பதிலுக்கு நன்றி தெரிவித்த அந்த ரசிகர் தான் இணையத்தில் படத்தை பார்த்து படங்கள் திருடப்படுவதை ஊக்குவிக்க விரும்பவில்லை என்று, 25 நாட்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் பெயரில் நிச்சயம் $10 தானம் செய்வதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் அதிகரித்து வரும் திரைப்பட திருட்டு மற்றும் திருட்டு விசிடி கலாச்சாரத்தை ஒழிக்கப் பலரும் முயன்று வரும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் பொருளாளராக இருந்து கொண்டே எஸ்.ஆர்.பிரபு இப்படித் தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com