கந்துவட்டிக் கொடுமையைச் சட்டமும் திரைத்துறையும் தடுக்கவேண்டும்: கமல் வேண்டுகோள்!

கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதைச் சட்டமும் சினிமாத்துறையும்...
கந்துவட்டிக் கொடுமையைச் சட்டமும் திரைத்துறையும் தடுக்கவேண்டும்: கமல் வேண்டுகோள்!

கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதைச் சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாகவேண்டும் என்று கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் மைத்துனரான இவர், சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளராவும், அலுவலக நிர்வாகியாகவும் இருந்து வந்தார். தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார், தனது கடிதத்தில் ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் பெற்ற கடனுக்கு கந்துவட்டி கொடுத்து வந்ததும் அவர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததும் அதனால்தான் தற்கொலை முடிவு எடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதத்தின் அடிப்படையில் வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். அதேவேளையில் இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் அன்புச்செழியன் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் என வலியுறுத்தினர். தலைமறைவாக உள்ள அன்புச்செழியனைக் கைது செய்வதற்கு 3 தனிப்படைகள் அமைத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் உத்தரவிட்டார்.

அன்புச்செழியனை கைது செய்வதற்கு மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தனிப் படை போலீஸார் விரைந்துள்ளனர். அவரது இருப்பிடத்தை அறிய அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அன்புச்செழியனை ஓரிரு தினங்களுக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கமல் கூறியதாவது: 

கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதைச் சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாகவேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com