கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்: கமல்

மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்: கமல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புதன்கிழமை காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே சுமார் 500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8.30 மணியளவில் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ஓகி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்துக்குக் காற்று வீசி வருகிறது. கடலூர், புதுச்சேரி, நாகை துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கன மழை பெய்துவருகிறது. புயல் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அனைத்து விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து ஓகி புயல் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கமல் கூறியதாவது:

மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com