ஒரே படத்தில் பணியாற்றும் சரத்குமாரின் இரு மகள்கள்! 

பிரபல இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ப்ரியதர்க்ஷினி இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில், நடிகர் சரத்குமாரின் இரு மகள்களும் பணியாற்ற உள்ள தகவல் வெளியாகியுள்ளது. 
ஒரே படத்தில் பணியாற்றும் சரத்குமாரின் இரு மகள்கள்! 

சென்னை: பிரபல இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ப்ரியதர்க்ஷினி இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில், நடிகர் சரத்குமாரின் இரண்டு மகள்களும் பணியாற்ற உள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குநர் மிஷ்கினின் உதவியாளராக பணியாற்றியவர் ப்ரியதர்க்ஷினி. இவர் பெண்களை மையக்கதாபாத்திரமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதற்காக நடிகை ஒருவரிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியானது

பின்னர் அந்த திரைப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் மையக்கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர்கள் இன்று வெளியாகின. 'ஷக்தி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நவநாகரீகப் பெண்ணாக வரலக்ஷ்மி நடிக்க  உள்ளதாகத் தெரிகிறது. தற்பொழுது இந்த திரைப்படம் குறித்த மற்றொரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது 

நடிகர் சரத்குமாரின் மூத்த மகளான வரலக்ஷ்மி நாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில், ஆடை வடிவமைப்பாளராக அவரது இளைய மகளான பூஜா சரத்குமார் அறிமுகமாகிறார். இது பற்றி வரலக்ஷ்மி கூறியதாவது:

பூஜாவுக்கு இயல்பிலேயே  ஆடைத் தேர்வுகள் குறித்த தனித்த விருப்பம் இருந்தது. எனக்கு கூட சில முக்கிய நிகழ்வுகளுக்கு அவர்தான் ஆடைகளை தேர்வு செய்வார். எனவே அவர் இதனை தனது துறையாக தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் எண்ணிணோம்.

இந்த திரைப்படத்தில் அதிக அளவில் பெண் கதாபாத்திரங்கள் இருப்பதால் அவருக்கு பணியாற்ற எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். அத்துடன் அவளுக்கு வழி காட்ட  நானும் இருக்கிறேன்.

இவ்வாறு வரலக்ஷ்மி தெரிவித்தார்.

முதல் பட வாய்ப்பு குறித்தும் வரலட்சுமியின் தோற்றம் பற்றியும் பூஜா சரத்குமார் கூறும்பொழுது, ' அவரது தோற்றம் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்து இயக்குநர் என்னிடம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். படத்தில் அவர் ஒரு பன்னாட்டு நிறுவன பணியாளர் போன்ற தோற்றத்தில் இருப்பார். அவரது உடைகளும் சாதாரணமாகவும் வெகு இயல்பாகவுமிருக்கும்' என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com