‘மெர்சல்’ படத்தில் மொத்தம் 16 மேஜிக் காட்சிகள்; இதற்காக உண்மையிலேயே மேஜிக் கற்றுக்கொண்ட விஜய்!

மெர்சலில் மேஜிக் கலைஞராக ஒரு கதாப்பாத்திரத்தில் தோன்றும் நடிகர் விஜய் அதற்காக உண்மையிலேயே மேஜிக் கற்றுக்கொண்டதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஹேமா ருக்மணி கூறியுள்ளார்.
‘மெர்சல்’ படத்தில் மொத்தம் 16 மேஜிக் காட்சிகள்; இதற்காக உண்மையிலேயே மேஜிக் கற்றுக்கொண்ட விஜய்!

மெர்சலில் மேஜிக் கலைஞராக ஒரு கதாப்பாத்திரத்தில் தோன்றும் நடிகர் விஜய் அதற்காக உண்மையிலேயே மேஜிக் கற்றுக்கொண்டதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஹேமா ருக்மணி கூறியுள்ளார்.

தீபாவளிக்குத் தமிழில் வெளியாக இருக்கும் மூன்று திரைப்படங்களில் பலரது எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள படம் இயக்குநர் அட்லியின் மெர்சல். படத்திற்கு பல்வேறு ரீதியாக பிரச்னைகள் எழுந்த நிலையில் ஒரு வழியாகப் படம் நாளைத் திரைக்கு வரவுள்ளது. இதில் நடிகர் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்திய மேனன், வடிவேலு, கோவை சரளா, சத்தியராஜ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தேனாண்டாள் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மொத்தம் 16 மேஜிக் காட்சிகள் இருப்பதாகவும், அதற்காக மேஜிக் கலைஞர்களிடம் பயிற்சிபெற்று உண்மையிலேயே நடிகர் விஜய் ஒரு மேஜிக் மேனாக மாரியிருப்பதாகவும் தயாரிப்பாளர் ஹேமா தெரிவித்துள்ளார்.

‘எந்த கிராஃபிக்சும் பயன்படுத்தப்படாமல் அனைத்துக் காட்சிகளும் உருவாகியுள்ளது மகிழ்ச்சி தருகிறது, உண்மையிலேயே மேஜிக் செய்து நடிகர் விஜய் அசத்தியுள்ளார்’ என்று ஹேமா குறிப்பிட்டுள்ளார். 

மேலும் மெசிடோனியா நாட்டைச் சேர்ந்த மேஜிக் கலைஞரான கோகோ ரெகுயம் நடிகர் விஜய் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘விஜய்யுடன் இணைந்து பணியாற்றியதை நினைத்து பெருமைப் படுகிறேன், மெர்சல் படத்தில் வரும் மேஜிக் காட்சிகள் அனைத்தும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com