மெர்சல் தெலுங்கு பதிப்பு வெளியீடு தள்ளிவைப்பு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

மெர்சல் திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பு வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது.
மெர்சல் தெலுங்கு பதிப்பு வெளியீடு தள்ளிவைப்பு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இதில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரம் செய்துள்ளார்.

இதுதவிர வடிவேலு, கோவை சரளா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் நிறுவனத்தின் 100-ஆவது தயாரிப்பாக இப்படம் வெளியானது.

தமிழில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. ரூ. 200 கோடியைத் தொடவுள்ள முதல் படம் என்கிற பெருமையை அடையவுள்ளது.

இந்நிலையில் மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பு - அதிரிந்தி (Adirindhi) நாளை வெளியாகிறது. தெலுங்கிலும் தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ளது. முதலில் தமிழில் வெளியானது போலவே தெலுங்கிலும் அக்டோபர் 18 அன்று வெளியாக இருந்தது. 

ஆனால் தணிக்கையில் சில காலதாமதங்கள் ஆனதால் (அக். 27) நாளை வெளிகும் என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மெர்சல் தெலுங்குப் பதிப்பு நாளை வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் வியாழக்கிழமை இரவு அறிவித்தது. மேலும் அதிரிந்தி வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.

ஜிஎஸ்டி குறித்த காட்சிகள் நீக்கம் காரணமாக பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com