வடிவேலு இப்படிச் செய்யலாமா? இயக்குநர் ஷங்கர் கோபம்!

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கும் படம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி.
வடிவேலு இப்படிச் செய்யலாமா? இயக்குநர் ஷங்கர் கோபம்!

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கும் படம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி. ஜிப்ரான் இசையமைப்பாளராகவும், விவேக் ஹர்ஷன் எடிட்டராகவும், ஆர்.சரவணன் ஒளிப்பதிவாளராகவும், கலை இயக்குநராக முத்துராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இப்பட வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியது.

வடிவேலு நாயகனாக நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்ற 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் 2-ம் பாகம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் அதற்கு மாறாக நடிகர் வடிவேலு இப்படத்தில் நடிக்க அக்கறை காட்டவில்லை. கடந்த வருடம் நடந்த பட பூஜைக்குப் பிறகு, வடிவேலு ஒப்பந்தமானதை விட அதிக சம்பளம் கேட்டதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஓராண்டு தள்ளிப் போன நிலையில் வடிவேலுவிடம் சமாதானம் பேசி, ஃபோட்டோ ஷூட் நடத்திய பின்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டது படக்குழு. 

கடந்த மாதம் மீண்டும் சென்னையில் பிரம்மாண்டமான அரங்கில் இம்சை அரசன் 24-ம் புலிகேசியின்  படப்பிடிப்பு தொடங்கவிருந்தது. ஆனால் தற்போது இந்தப் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. இதற்கும் நடிகர் வடிவேலுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.  பல்வேறு பிரச்சனைகளை காரணமாகச் சொல்லி வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார் என்றனர் படக்குழுவினர். 

இது குறித்து இயக்குனர் ஷங்கர் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளாராம். வடிவேலுவிற்குத் தரப்பட்ட அட்வான்ஸ் தொகையை திரும்பப் பெற்றுத் தர கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வடிவேலு படத்திலிருந்து விலகிவிட்டால், வேறு நடிகரை வைத்து படப்பிடிப்பை விரைவில் தொடங்கவிருப்பதாக படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com