மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் விஜய்: நடிகர் விவேக் உருக்கம்!

மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளித்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வரும் விஜய்க்கு நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார்...
மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் விஜய்: நடிகர் விவேக் உருக்கம்!

மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளித்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வரும் விஜய்க்கு நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரை, நடிகர் விஜய் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் அனிதா (17). நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் கடந்த 1 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு அரசியல் கட்சியினர், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்டோர் அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணிக்கு அனிதா வீட்டுக்குச் சென்ற நடிகர் விஜய், அனிதாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

பிறகு, அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் அவரது சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார்.

இந்நிலையில் இதுகுறித்த செய்தி வெளியான பிறகு, விஜய்க்குச் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தன. விஜய்யைப் பாராட்டி நிறைய மீம்கள் வெளிவந்தன. அதிலும் முக்கியமான ஒரு மீம் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், பண மதிப்பிழப்பு தொடர்பான பேட்டி, அனிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் என மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டங்களுக்கும் விஜய் அளித்த ஆதரவைக் குறிக்கும் விதமாக மீம் ஒன்று வெளியானது. இது விஜய் ரசிகர்களிடையே பலத்த பாராட்டைப் பெற்றது.

இதையடுத்து, இந்த மீமை முன்வைத்து நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: அன்பு விஜய்! உங்கள் செயல் என் உள்ளத்தை உணர்ச்சிவசப்படச் செய்கிறது. உங்கள் அக்கறைக்கும், கருணைக்கும் வாழ்த்துகள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com