ஸ்பைடர் (தமிழ்) பட தொலைக்காட்சி உரிமையைப் பெற்றது சன் டிவி!

தமிழ்த் திரையுலகில் வெளியாகும் முக்கியமான படங்களின் தொலைக்காட்சி உரிமைகளைப் பெறுவதில் சன் டிவி முன்னணி வகிக்கிறது...
ஸ்பைடர் (தமிழ்) பட தொலைக்காட்சி உரிமையைப் பெற்றது சன் டிவி!

தமிழ்த் திரையுலகில் வெளியாகும் முக்கியமான படங்களின் தொலைக்காட்சி உரிமைகளைப் பெறுவதில் சன் டிவி முன்னணி வகிக்கிறது. 

கடந்த வருடம் வெளியான தெறி மற்றும் சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய இரு படங்களின் தொலைக்காட்சி உரிமைகளைப் பெற்றுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

இவை மட்டுமல்லாமல், பல பெரிய படங்களின் தொலைக்காட்சி உரிமைகளையும் சன் டிவி பெற்றுள்ளது. 

சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் படம், சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படம், ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக அறிமுகமான மீசைய முறுக்கு என முக்கிய படங்களின் தொலைக்காட்சி உரிமைகள் சன் டிவி வசம் உள்ளன.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவரவுள்ள ஸ்பைடர் படத்தின் தமிழ்ப் பதிப்பின் தொலைக்காட்சி உரிமையையும் சன் டிவி பெற்றுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரித்துள்ளார்கள். இந்தப் படம் செப்டம்பர் 27 அன்று வெளிவரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com