பாலிவுட் நடிகை தியா மிர்ஸா அப்படி என்ன செய்தார்?

தியா மிர்ஸாவை நினைவிருக்கிறதா? ஹைதராபாத்தை சேர்ந்த இவர் 2000-ம் ஆண்டு மிஸ் ஏஷியா பசிபிக் அழகிப் பட்டத்தை வென்றவர். 
பாலிவுட் நடிகை தியா மிர்ஸா அப்படி என்ன செய்தார்?

தியா மிர்ஸாவை நினைவிருக்கிறதா? ஹைதராபாத்தை சேர்ந்த இவர் 2000-ம் ஆண்டு மிஸ் ஏஷியா பசிபிக் அழகிப் பட்டத்தை வென்றவர். அதன் பின் பாலிவுட் படங்களில் நடித்துப் பிரபலமானவர். தயாரிப்பாளர் சஹில் சங்காவுடனான திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகி இருந்தவர் சஞ்சத் தத் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சினிமாவில் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் சமூக அக்கறையில் எப்போதும் நாட்டம் உள்ளவர் தியா.

குடிநீர் பாதுகாப்பு, விலங்குகள் நலப் பிரச்னை என எதுவாக இருந்தாலும் தியா மிர்சா குரல் குடுப்பவர். தியா மிர்ஸா தனது சமூகப் பணிக்காக நிறைய பாராட்டைப் பெற்றிருக்கிறார். சுற்றுச்சூழலுக்கான பங்களிப்புக்காக, IIFA-லிருந்து 2012-ம் ஆண்டு பசுமை விருது பெற்றார். அதே சமயத்தில், எச்.ஐ.வி, பெண் சிசுக் கொலை, புற்றுநோய் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்துள்ளார்.

பிரபலமாக இருந்தாலும் அவருடைய சமூகப் பொறுப்பும் அக்கறையும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தான் பிரபலமாக இல்லாமல் இருந்திருந்தால் இதைவிட அதிக சமூக அக்கறை உடையவராக இருந்திருப்பேன் என்று கூறியுள்ளார் தியா. அவர் சமீபத்தில் மும்பையில் ஜுகு கடற்கரையில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது கடற்கரையில் மிதந்த குப்பைக் கழிவுகளைப் பார்த்து உடனடியாக களத்தில் இறங்கினார். சுகாதார ஊழியர்களுடன் சேர்ந்து அக்குப்பைகளை க்ளவுஸ் அணிந்த கைகளால் எடுத்து அப்புறப்படுத்தினார். இதுபற்றி தியா கூறியது, 'விநாயகச் சதுர்த்திக்குப் பிறகு 400 டன் குப்பைகள் கடற்பகுதியில் தேங்கிவிட்டது. அதனை அகற்றும் பணியில் கிட்டத்தட்ட 1200 பேர் இளைஞர்கள் ஈடுபட்டனர். நானும் கலந்துகொண்டேன். பண்டிகை கொண்டாடினாலும் சுத்தமாக வைத்துகொள்வதும் நம் கடமை தானே. 

சினிமாவில் நடித்து கிடைத்த புகழ் இது போன்ற சமூக சேவையின் போது பயன்படுவதை நினைத்து சந்தோஷம்தான். நான் சினிமா நடிகையாக ஆகாமல் இருந்தாலும் சமூக ஆர்வலராக இருந்திருப்பேன். திரைத்துறையில் கிடைக்கும் புகழ் வேறு எந்தத் துறையிலும் கிடைப்பது அரிது. அவ்வகையில் இதை நான் ஆசிர்வாதமாகவே நினைக்கிறேன்’ என்றார்.

35 வயதான தியா, சமூகப் பிரச்னைகளுக்காக போராடுவதின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளார். இது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறியது 'ஏன் இவற்றைச் செய்ய வேண்டும் என்ற தேவை பெர்சனலான ஒரு விஷயம். வாழ்க்கையின் அர்த்தம் நாம் தேர்ந்தெடுக்கும் விஷயங்களில் உள்ளது என்று நினைப்பவள் நான். எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள். இந்த தேசத்துக்கு என்னாலான ஒரு சிறு பங்களிப்பை செய்ய முடிகிறது என்பதில் எனக்கு சந்தோஷம் ஏற்படும். இந்த என்னுடைய நிலைப்பாட்டினால் பெரிமிதம் அடைகிறேன்’ என்று கூறினார் தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com