ஃபெப்சி பிரச்னையில் உடன்பாடு

ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்னையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால், இனி தடையின்றி படப்பிடிப்பு நடைபெறும் என ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். 
ஃபெப்சி பிரச்னையில் உடன்பாடு

ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்னையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால், இனி தடையின்றி படப்பிடிப்பு நடைபெறும் என ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். 
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஃபெப்சி அமைப்புக்கும் இடையே கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த பிரச்னைகள் பேசித் தீர்க்கப்பட்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இனி சினிமா படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் தடையின்றி தொடங்கும். பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைத்த அனைத்து சினிமா சங்கங்களுக்கும் நன்றி. 
வேலைக்கு சம்பளமே தவிர, தொழிலாளர்களின் பயணத்துக்கு சம்பளமில்லை என்பதுதான் தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக இருந்தது. இந்தப் பிரச்னைக்கு முதல் காரணமாகவும் அதுதான் இருந்தது. அதைப் பேசி, உடன்பாடும் ஏற்பட்டுள்ளது. ஃபெப்சியில் ஓர் அங்கமாக இருந்த டெக்னீசியன் யூனியன் தனியாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.
கால மாற்றத்துக்கு ஏற்பவும், தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்பவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டள்ளன. தொழிலாளர்களும் கால மாற்றத்துக்கு ஏற்ப மாற வேண்டியுள்ளது. அதையும் கவனத்தில் கொண்டு பேச்சுவார்த்தையை முடித்துள்ளோம். பல விமர்சனங்கள் இருந்தன. அதையெல்லாம் கவனத்தில் கொண்டு இந்த பேச்சுவார்த்தையை முடித்துள்ளோம். இதற்கு ஒத்துழைப்பு தந்த தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நன்றி.
சிறு படத் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு எத்தனை தொழிலாளர்கள் வேண்டுமோ, அவர்களை ஃபெப்சியில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com