இயக்குனர் நலன் குமாரசாமிக்கு திருமணம்!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான நாளைய இயக்குநர் மூலம் அறிமுகமானவர்
இயக்குனர் நலன் குமாரசாமிக்கு திருமணம்!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான நாளைய இயக்குநர் மூலம் அறிமுகமானவர் நலன் குமாரசாமி. 2013-ல் வெளிவந்த சூது கவ்வும் படம் பரவலான கவனத்தைப் பெற்றது. நலன் இயக்கிய சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு படங்களுமே அவருக்குத் தரமான படங்களைத் தரும் இயக்குனர் என்ற புகழைப் பெற்றுத் தந்தது. இத்திரைப்படங்கள் விஜய் சேதுபதியின் திரைப் பயணத்திலும் முக்கிய பங்கு வகிப்பவை எனலாம். தன்னுடைய படங்களின் கதையை சுவாரஸ்யமான வசனங்களிலும் நகைச்சுவையிலும் சொல்லியிருப்பார் நலன். 

36 வயதாகும் நலன் குமாரசாமிக்கு இரண்டு தினங்களுக்கு முன்னால் கொத்தமங்கலம் கிராமத்தில் உறவினர் சூழ நிச்சயதார்த்தம் நடந்தது. இவ்விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். அவரது உறவினர் சரண்யாவை மணக்கிறார் நலன். திருமணம் நவம்பர் 9-ம் தேதி என உறுதி செய்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com