வெள்ளிக்கிழமை 9 தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றனவா?

இந்த 9 படங்களும் வெள்ளியன்று வெளியாகவுள்ளதாகச் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன...
வெள்ளிக்கிழமை 9 தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றனவா?

ஆயிரத்தில் இருவர், நான் ஆணையிட்டால், களவு தொழிற்சாலை, பயமா இருக்கு, வல்ல தேசம், கொஞ்சம் கொஞ்சம், பிச்சுவாக்கத்தி, தெரு நாய்கள், காகாகா என ஒன்பது படங்கள் வருகிற வெள்ளியன்று வெளிவரவுள்ளன.

ஆயிரத்தில் இருவர் படத்தை சரண் இயக்கியுள்ளார்.  ராணா டகுபதி, காஜல் அகர்வால் நடித்துள்ள நான் ஆணையிட்டால், தெலுங்கு டப்பிங் படமாகும். 

முதலில் 11 படங்கள் வெளிவர இருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த ஒன்பது படங்கள் மட்டுமே வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 9 படங்களும் வெள்ளியன்று வெளியாகவுள்ளதாகச் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. எனினும் வருகிற வெள்ளியன்றுதான் சரியாக எத்தனை படங்கள் வெளியாகின என்பது திட்டவட்டமாகத் தெரியவரும்.

அடுத்த வாரம் ஸ்பைடர், கருப்பன், ஹர ஹர மஹா தேவகி என மூன்று படங்கள் வெளிவருகின்றன. அதன்பிறகு தீபாவளியன்றுதான் புதுப்படங்கள் வெளியாகும் என்கிற நிலைமை உள்ளதால் வருகிற வெள்ளியன்று வெளிவர பல படங்கள் முயற்சி செய்துவருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com