சினிமா டிக்கெட், பாப்கார்ன் செலவுகளைத் தவிர்க்க வெப் சீரீஸ் பாருங்கள் என்று கூறும் பிரபல நடிகர் யார்?

திருட்டு பயலே-2 வெற்றி சந்தோஷத்துக்குப் பிறகு பாபி சிம்ஹா நடித்துக் கொண்டிருப்பது ஒரு மலையாள சினிமாவில்
சினிமா டிக்கெட், பாப்கார்ன் செலவுகளைத் தவிர்க்க வெப் சீரீஸ் பாருங்கள் என்று கூறும் பிரபல நடிகர் யார்?

திருட்டு பயலே-2 வெற்றி சந்தோஷத்துக்குப் பிறகு பாபி சிம்ஹா நடித்துக் கொண்டிருப்பது ஒரு மலையாள சினிமாவில். `கம்மர சம்பவம்' என்ற அந்தப் படத்தில் அவருடன் திலீப், சித்தார்த், ஸ்வேதா மோகன், நமீதா பிரமோத் ஆகியோர் நடித்துள்ளனர். தன் திரை பயணத்தில் இது போன்றதொரு கதாபாத்திரத்தில் நடித்ததிலை என்று கூறுகிறார் பாபி சிம்ஹா.

`வல்லவனுக்கு வல்லவன்' மற்றும் விக்ரமுடன் `சாமி-2' படத்திலும் நடித்துள்ளார். பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி சிம்ஹா. இது குறித்த தகவல்களை விரைவில் தெரிவிப்பார். இது தவிர இணையத் தொடர் ஒன்றிலும் பரபரப்பாக நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் அந்த வெப் தொடரில் அவருடன் காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அண்மையில் ஒரு பேட்டியில் அவர் கூறியது, ‘இனி வரும் காலம் டிஜிட்டல் யுகம். எதிர்காலத்தில் எல்லாமே இணைய மயமாக இருக்கப் போகிறது. சில சமயம் என்னால் தியேட்டருக்கு போய் படம் பார்க்க முடியாது என்கிற நிலையில், என்னுடைய கையருகே இருக்கும் இந்த தளத்தை பயன்படுத்துதான் எளிது. குடும்பத்துடன் சேர்ந்து திரை அரங்குக்குச் சென்று ஒரு படத்தை பார்க்கும் போது, பாப் கார்ன் உள்ளிட்ட பல செலவுகளை தவிர்க்க நினைக்கும் திரை ரசிகர்களுக்கு இந்தத் தளம் நிச்சயம் வரப் பிரசாதமாக இருக்கும். 

மாற்றம் என்பது காலத்தின் விதியெனும் போது சினிமாவிலும் அது நிகழும். நாம் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பது தான் முக்கியம். திரையில் அது எந்த வடிவத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே’ என்று கூறினார் பாபி சிம்ஹா.

டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தான் வருங்காலமாக இருக்கக் போகிறது. சில நேரங்களில் என்னால் திரையரங்கில் படத்தை பார்க்க முடியாதபோது, பின்னர் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் சட்டத்திற்குட்பட்டு பார்க்க முடிகிறது. சினிமா டிக்கெட், பாப்கார்ன் விலையை கணக்கில் கொண்டால், நிச்சயமாக வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்" என்றார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com