மலையாள நடிகர் கொல்லம் அஜித் யார்?

வில்லன் வேடங்களால் கொல்லம் அஜித் மலையாளத் திரையுலகில் அதிகக் கவனம் பெற்றார்...
மலையாள நடிகர் கொல்லம் அஜித் யார்?

Yuvajanotsavam, Nadodikkattu போன்ற மலையாளப் படங்களில் நடித்துக் கவனம் பெற்ற நடிகர் கொல்லம் அஜித் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 56. 

வயிறு தொடர்பான பிரச்னைகளுக்காக அவர் கேரளாவின் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு மனைவி பிரமீளா, மகள் காயத்ரி, மகன் ஸ்ரீஹரி ஆகியோர் உள்ளார்கள்.  

கொல்லம் பகுதியிலிருந்து வந்ததால் தன்னுடைய பெயரான அஜித் குமாருக்கு முன்பு கொல்லம் என்று சேர்த்துக்கொண்டார். 1983-ல் Parannu Parannu Parannu என்கிற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். கொல்லம் அஜித் முதலில் உதவி இயக்குநராகவே திரையுலகில் பணியாற்றினார். இயக்குநர் பத்மராஜனுக்கு உதவி இயக்குநராக இருந்தார். பிறகு அவர் படத்தில் தான் நடிகராக அறிமுகம் ஆனார். இதனால் பத்மராஜன் இயக்கிய பல படங்களில் கொல்லம் அஜித் நடித்துள்ளார். பத்மராஜனின் படங்களில் அஜித் வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.

1989-ல் சிபி விஜயகுமார் இயக்கிய அக்னிபிரவேசம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 500 படங்களில் நடித்துள்ள அஜித் குமார்,  Aaraam Thampuran, Olympiyan Anthony Adam, No.20 Madras Mail, Nirnayam, Valliettan போன்ற முக்கியமான படங்களில் இடம்பெற்றார். வில்லன் வேடங்களால் கொல்லம் அஜித் மலையாளத் திரையுலகில் அதிகக் கவனம் பெற்றார். Calling Bell, Pakal Pole ஆகிய இரு மலையாளப் படங்களை இயக்கியுள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

மம்மூட்டியுடன் Veendum, Mission 90 Days, Prajapathi மற்றும் மோகன்லாலுடன் Aaraam Thampuran, Lal Salam, Olympiyan Anthony Adam, Nirnayam போன்ற முக்கியப் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2012-ல், Ivan Ardhanaari என்கிற படத்தில் நடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com