இந்த பதருக்கும் மரண தண்டனை தீர்ப்பே சரி! நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கடுங்கோபம்!

கஸ்தூரி மற்றொரு பதிவில் விழுப்புரம், வேலாம்புதூர் கொலை தொடர்பாக ஒரு பதிவையும் எழுதியுள்ளார்
இந்த பதருக்கும் மரண தண்டனை தீர்ப்பே சரி! நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கடுங்கோபம்!

ட்விட்டரில் ரஜினி, கமல் இருவரையும் அண்மையில் பகடி செய்து பதிவு எழுதினார் நடிகை கஸ்தூரி. 

சமீபத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலை குறித்து தனது கருத்தை ட்விட்டரில் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, 'அம்மா சிலையை வடிக்க சொன்னா சிற்பி அவரு சொந்த அம்மாவை வடிச்சிட்டாரு போல! கமலை பார்த்து ஊழல் புகாருக்கு ஆதாரம் இருக்கான்னு கேட்கற மங்குனிஸ் இனி கட்சி ஆபீசுல இந்த சிலையை பார்த்தாலே போதுமே!  This is an insult, not tribute. .’ என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கஸ்தூரிக்கு எதிர்வினையாக சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கஸ்தூரி மற்றொரு பதிவில் விழுப்புரம், வேலாம்புதூர் கொலை தொடர்பாக ஒரு பதிவையும் எழுதியுள்ளார், ‘பால் மணம் இன்னும் எஞ்சியிருக்கும் அந்த 13 வயது பிஞ்சை குழந்தையாக பார்க்காமல் குமரியாக பார்த்த கண்களை என்ன செய்யலாம்? சித்திரத்தை  சீரழித்த, சித்ராவை எரித்த  காமுகனை என்ன செய்தால் தகும்? POCSOஇல் இந்த பதருக்கும் மரண தண்டனை தீர்ப்பே சரி. 

விழுப்புரம் படுகொலை பற்றிய ஒரு ட்விட்டர் பதிவில் கஸ்தூரி ஜாதியின் பெயரை குறிப்பிட்டு இருந்ததால், அதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன.  தன்னை வசைபாடுவதை சுட்டிக் காட்டி இன்னொரு ட்வீட் போட்டார் கஸ்தூரி, 'பெருமை வாய்ந்த பெரும்பான்மை சமூகமே! இன்று என்னை நீலப்படத்தில் நடிக்க வைத்து, ஊர் மேயவைத்து, சபித்து, மிரட்டி எல்லாம் ஆயிற்று. சரி. ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. எதோ வேண்டுதல் மாதிரி phonecalls எதற்கு? அதனால் யாருக்கும் பயனில்லை. Time Waste.சொல்ல வேண்டியதை இங்கேயே  சொல்லலாமே’.

அந்தப் பதிவை நீக்கிய கஸ்தூரி, ’பிழைக்கு வருந்துகிறேன். மன்னித்துவிடுங்கள். வேலாம்புதூர் படுகொலை குறித்து முந்தைய கீச்சில் 'அன்னியக்கும்பல்", Anniyar, என்பதற்கு பதில் "Vanniyar" என்று எழுத்துப்பிழை காரணத்தால், அந்த கீச்சை நீக்குகிறேன். அந்த கீச்சை யாரும் SS எடுத்து தொடர்ந்து பகிரமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.’என ரீ ட்வீட் செய்தார் கஸ்தூரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com