jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு சினிமா செய்திகள்

‘பாட்டிகள் ஜாக்கிரதை’ சுரேஷ் சக்ரவர்த்தி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

By சரோஜினி  |   Published on : 02nd January 2018 04:24 PM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

suresh_chakravarthi

 

அது சன் தொலைக்காட்சியின் மாலை நேர ஸ்லாட் ஆரம்பித்திருந்த புதிது என்று நினைவு. அப்போது ‘பாட்டிகள் ஜாக்கிரதை’ என்றொரு மினித்தொடர் ஒளிபரப்பானது. அவ்வை ஷண்முகி படமும் அந்த  நேரத்தில் தான் ரிலீஸ் ஆனது. இப்போது போல மீம்ஸ்கள், ட்ரால்கள் எல்லாம் இல்லாத காலம் அது. அப்போது இன்டர்நெட்டே அரிது. செல்ஃபோன்கள் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் வஸ்துக்களாக இருந்த நாட்கள் அவை. அப்படியே செல்ஃபோன்கள் இருந்தாலும் கூட அவை போலீஸ்காரர்களின் வாக்கிடாக்கி லுக்கில் நுனியில் சின்ன ஆண்டெனாக் கொம்புகளுடன் மினி எருமைக்குட்டிகள் போல இருக்கும். அப்படியோர் காலத்தில் தான் அவ்வை ஷண்முகியை ட்ரால் செய்வது போல ‘பாட்டிகள் ஜாக்ரதை’ என்றொரு சீரியல் ஒளிபரப்பானது. 

கதை அவ்வை ஷண்முகியின் அதே பிளாட்ஃபார்ம். கணவரை விவாகரத்துச் செய்து விட்ட மனைவியின் மனதை கணவரே பெண் வேடமிட்டுச் சென்று (ஏ)மாற்றி அவளை மனம்மாறச் செய்வது தான். இதில் கமல் வேடத்தில் ஐ மீன் பெண் வேடமிடும் கணவராக சுரேஷ் சக்ரவர்த்தி அசத்தி இருந்தார். மனைவியாக கோடை மழை வித்யா. அந்த சீரியலை யூடியூபில் தேடிப் பார்த்ததில் அப்படியோர் சீரியல் ஒளிபரப்பானதற்கான தடயங்கள் ஏதும் சிக்கவில்லை. 

அதற்குப் பதிலாக 2011 ஆம் ஆண்டில் ஜெயாடிவியில் ஒளிபரப்பான ‘எனக்குள் ஒருத்தி’ சீரியலில் சுரேஷ் சக்ரவர்த்தி மோனோ ஆக்டிங் செய்த இந்த வீடியோ கிளிப்பிங் தான் கிடைத்தது. இதுவும் கலக்கல் காமெடி தான் பார்த்து ரசியுங்கள்.

இவரது காமெடி நடிப்பை முதன்முதலில் கண்டு ரசித்தது ‘அழகன்’ திரைப்படத்தில் ’அதிராம்பட்டிணம் சொக்குவாக’... ஒரு கால் உடைந்த காமெடியனாக சில காட்சிகளில் வருவார்.

இவரது என்ட்ரியைக் கண்டு அழகன் திரைப்படத்தில் வரும் குழந்தைகள் பேசிக் கொள்ளும் வசனம்;

‘இப்படி ஒரு சீக்கு மாமா வருவார்னு தெரிஞ்சிருந்தா, நாம வேற வீட்ல போய் பொறந்திருக்கலாம்’ 

இவர் திரைப்படங்களில் நிறைய வந்ததாகத் தெரியவில்லை. சின்னத்திரையிலும் அதிகமாகத் தென்படவில்லை. சொல்லி வைத்தாற்போல வெகு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் தான் இவரைக் கண்டதாக நினைவு. ஆனால் தான் பங்களித்த அத்தனையிலும் பார்ப்பவர்கள் கண்டு ரசிக்கும் வகையிலும் சபாஷ் சொல்லும் வகையிலும் இருந்தது இவரது திறமை!

சரி, திடீரென என்ன ஒரே சுரேஷ் சக்ரவர்த்தி மகாத்மியம் என்று தோன்றலாம்.

நேற்று சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ‘அன்புடன் ரம்யாகிருஷ்ணன்’ என்றொரு புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். 

அதில் ரம்யாவின் நண்பர்களில் ஒருவராக சுரேஷ் சக்ரவர்த்தியும் பங்கேற்று ரம்யா கிருஷ்ணன் ஸ்டைலில் தயிர்ச்சாத ரெஸிப்பி சொல்லி அனைவரையும் சிரி, சிரியென்று சிரிக்க வைத்தார்.

இப்போது மேலதிக தகவலாக ஒன்று இன்றைய தேதிக்கு சுரேஷ் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ‘பனானா ட்ரீ’ என்ற பெயரில் சொந்தமாக ரெஸ்டாரென்ட் வைத்து நடத்தி வருகிறாராம். இங்கிருந்து அங்கே படப்பிடிப்புக்காகச் செல்லும் கோலிவுட் நண்பர்களுக்கு படப்பிடிப்பு ரீதியாக உதவுவதும் அவர் தான் என்கிறார்கள்.

நகைச்சுவை நடிப்பில் பலவகைகள் இருக்கலாம். அதில் யூகி சேது, மோகன் வெங்கட்ராம், சுரேஷ் சக்ரவர்த்தி, காத்தாடி ராமமூர்த்தி, கோவை அனுராதா வகைக் காமெடி தனி ரகம். அந்த வகைக் காமெடிகளுக்கும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. குறிப்பாக குழந்தைகளிடையே!

அந்த வகையில் தமிழ் சினிமாவிலும், சீரியலிலும் காமெடியன்கள் பலர் இருக்கலாம், ஆனாலும் வி மிஸ் யூ சுரேஷ் சக்ரவர்த்தி!

    தொடர்புடைய செய்திகள்
  • ஆக்டிங் எல்லாம் அப்புறம்... இப்போ ஆர்கிடெக்ட் பரீட்சை இருக்கு! நிவேதா தாமஸ்!
  • உங்களால் நான், உங்களுக்காக நான்: நயன்தாரா உருக்கம்!
  • கவிஞர் தாமரையின் இந்தப் பாடலும் சூப்பர் ஹிட்! என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய பாடல் வெளியானது!
  • விஜய்காந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள மதுர வீரன் பட டிரெய்லர்!
  • இயக்குநர் கெளதம் மேனன் இதுவரை கிராமப் படம் இயக்காதது ஏன்? கவிஞர் தாமரை தகவல்!
TAGS
suresh chakravarthy pattikal jagradhai serial comedy dharbar kolywood comedians சுரேஷ் சக்ரவர்த்தி கோலிவுட் காமெடியன்ஸ் பாட்டிகள் ஜாக்ரதை சீரியல்

O
P
E
N

புகைப்படங்கள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்