புத்தாண்டு அன்று இணையத்தில் ஹிட் அடித்த நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் நெகிழ்ச்சியான வீடியோ!

அப்பா, மகளின் அன்பும், வாஞ்சையுமாக அந்த வீடியோ காண்போர் அனைவரையும் கவர்ந்திழுக்க புத்தாண்டு அன்று அப்பா, மகள் பாசத்தை உணர்த்தும் ஒரு இன்ஸ்பிரேஷனல் வீடியோவாக இணையத்தில் டிரெண்டிங் ஆகி விட்டது. 
புத்தாண்டு அன்று இணையத்தில் ஹிட் அடித்த நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் நெகிழ்ச்சியான வீடியோ!

குணச்சித்திர நடிகரும், பின்னணிக்குரல் வித்தகருமான நடிகர் எம்.எஸ் பாஸ்கரும் அவரது மகளும் பங்கு பெறும் இந்த வீடியோ புத்தாண்டு அன்று கலக்கல் டிரெண்டிங் வீடியோவாக இணையத்தைச் சுற்றி வந்தது. வீடியோவில் பாஸ்கருக்கு அவரது மகளும் பின்னணிகுரல் கலைஞருமான ஐஸ்வர்யா புல்லட் வாகனம் ஒன்றைப் புத்தாண்டுப் பரிசாக அளித்து ஆச்சர்யப்படுத்துகிறார். அட, அப்பாவுக்கு மகள் புத்தாண்டுப் பரிசு அளிப்பதெல்லாம் புத்தாண்டு டிரெண்ட் ஆகுமா?  அதெப்படி என்றால்?

ஐஸ்வர்யா, தன் அப்பாவின் கண்களைக் கட்டியவாறு வேறொரு இருசக்கர வாகனத்தில்  சாலைக்கு அழைத்து வந்து சர்ப்பிரைஸாக தனது பரிசை அளிக்கிறார். கண் கட்டை அவிழ்த்து வண்டியைக் காட்டியதும் ஆச்சர்யப்படும் பாஸ்கரிடம், சந்தோஷம் பொங்க வண்டியைக் காட்டி 

‘எப்படி இருக்குப்பா?’ 

- என மகள் கேட்க,   கை தட்டிச் சிரிக்கும் மனைவி, 

‘ஐஸூ வாங்கிட்டு வந்துருக்கு... ’

என்று சந்தோசமாகச் சொல்ல, சற்றே திகைத்துப் போய் புல்லட்டை பார்க்கும் பாஸ்கர், மகளைக் கட்டியணைத்துச் சிரித்துக் கொண்டே ,

‘தேங்க்யூ டா!’

- என்று சொல்வதும், அப்பாவின் அணைப்பில் நெகிழும் மகளின் கண்கள் கசியத் தொடங்குவதுமாக ஒரு நெகிழ்ச்சியான வீடியோ கிளிப்பிங் அது.

எம்.எஸ். பாஸ்கருக்கு ராயல் என்ஃபீல்டூ வகை புல்லட் வண்டி என்றால் ரொம்ப இஷ்டமாம். ஆனால் இதுவரை அவரிடம் என்ஃபீல்டு வண்டி இல்லை. வீட்டில் கார் வாங்கிய பிறகும் கூட என்ஃபீல்டு புல்லட் வாகனக் கனவு நிறைவேறாத ஏக்கமாகவே தொடர்ந்திருக்கிறது. சினிமாவில் பிஸியான பிறகு அதைப் பற்றி யோசிக்க நேரமிருந்திருக்காது. ஆனாலும், பாசமான மகளுக்குத் தெரியாதா தந்தையின் ஏக்கம். ஐஸூவும் தமிழ்த் திரையுலகில் தற்போது பிரபலமாக வளர்ந்து வரும் டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதால், தனது சொந்த வருமானத்தில் தந்தைக்குப் ஸ்பெஷலாக என்ஃபீல்டு வண்டி வாங்கிப் புத்தாண்டு சர்ப்பிரைஸ் கிஃப்ட்டாக அளித்து ஆச்சர்யப் படுத்தி நெகிழ வைத்து தானும் நெகிழ்ந்து நெக்குருகிப் போனார். அப்பா, மகளின் அன்பும், வாஞ்சையுமாக அந்த வீடியோ காண்போர் அனைவரையும் கவர்ந்திழுக்க புத்தாண்டு அன்று அப்பா, மகள் பாசத்தை உணர்த்தும் ஒரு இன்ஸ்பிரேஷனல் வீடியோவாக இணையத்தில் டிரெண்டிங் ஆகி விட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com