தன் ஊழியர்களுக்கு 'முதல் நாள் முதல் ஷோ' 500 சினிமா டிக்கெட் புக் செய்து தந்த அசத்தல் நிர்வாகி!

தன் ஊழியர்களுக்காக முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் புக் செய்து தரும் அளவுக்கு எப்படிப்பட்ட ஒரு அருமையான நிர்வாகி இவர்?!’ என்று அவரது அப்பல்லோ ஊழியர்களெல்லாம் தற்போது பேசிப்பேசி மாய்ந்து போகிறார்களாம்.
தன் ஊழியர்களுக்கு 'முதல் நாள் முதல் ஷோ' 500 சினிமா டிக்கெட் புக் செய்து தந்த அசத்தல் நிர்வாகி!

டோலிவுட்டில் பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ‘அஞ்ஞாதவாசி’  திரைப்படம் சங்க்ராந்தியை முன்னிட்டு வெளியாகவிருப்பதைத் தொடர்ந்து படத்தின் டிக்கெட்டுக்களுக்கான முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இந்தியாவில் தெலுங்கு பேசும் மக்கள் வாழும் மாநிலங்கள் தவிர்த்து அமெரிக்காவிலும் கூட தெலுங்கர்கள் வாழும் பகுதியில் அஞ்ஞாதவாசிக்கான டிக்கெட் புக்கிங் ஏக கிராக்கியாக நடந்து முடிந்திருக்கிறது.

2018 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே மிக அதிக எதிர்பார்ப்பைக் கிளறிவிட்ட திரைப்படங்களில் ஒன்றான அஞ்ஞாதவாசியில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் அனு இம்மானுவேல் இருவரும் நடித்திருக்கிறார்கள். இயக்கம் திரிவிக்ரம். 

டோலிவுட்டைப் பொருத்தவரை தன் சகோதரர் சிரஞ்சீவியைப் போலவே வயது வித்யாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கக்கூடிய சக்தி பவன் கல்யாணுக்கு உண்டு. அது அஞ்ஞாதவாசிக்கான டிக்கெட் புக்கிங்கிலும் எதிரொலித்திருக்கிறது. வயதான ரசிகர்கள் முதல் கார்பரேட் அலுவலகங்களில் பணிபுரியும் இளைஞர்கள் வரை  அஞ்ஞாதவாசிக்கான டிக்கெட்டுகளை பல்க்காக புக் செய்து வைத்துள்ளனர். 

இதுதவிர மேலும் ஹைலைட்டான ஒரு விஷயம் என்னவென்றால்?! சிரஞ்சீவியின் மருமகளும் ஆந்திரப் பிரதேச அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகியுமான உபாசனா கொனிடேலா தனது மருத்துவமனை ஊழியர்களுக்காக அஞ்ஞாதவாசிக்கான சுமார் 500 டிக்கெட்டுகளை நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் முதல் நாள், முதல் ஷோ பார்க்க அட்வான்ஸ் புக்கிங் செய்து கொடுத்துள்ளாராம். மொத்த புக்கிங்கும் ஊழியர்களுக்காக மட்டுமே தான். அவரது நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அல்ல என்ற காரணத்தால் ‘அடடா... தன் ஊழியர்களுக்காக முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் புக் செய்து தரும் அளவுக்கு எப்படிப்பட்ட ஒரு அருமையான நிர்வாகி இவர்?!’ என்று அவரது அப்பல்லோ ஊழியர்களெல்லாம் தற்போது பேசிப்பேசி மாய்ந்து போகிறார்களாம்.

வாரே வா... உபாசனாவைப் பொருத்தவரை இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கதை. ஊழியர்களைத் திருப்திப் படுத்தியதாகவும் ஆச்சு, தன் குடும்பத்தைச் சார்ந்த ஹீரோவும் சின்ன மாமனாருமான பவன் கல்யாணிடம் நல்ல பெயர் வாங்கிய மாதிரியும் ஆயிற்று!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com