ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு அச்சுறுத்தல்: போலீஸாருக்கு தமுஎகச கண்டனம்!

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு அச்சுறுத்தல்: போலீஸாருக்கு தமுஎகச கண்டனம்!

மதுரையில் ஆவணப்பட இயக்குநா் திவ்யபாரதியை அச்சுறுத்திய போலீஸாருக்கு தமுஎகச கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடா்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கை: தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினரான திவ்யபாரதி ‘கக்கூஸ்' என்கிற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இவா் வழக்குரைஞா். ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்து ‘ஒருத்தரும் வரலே’ என்கிற ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திவ்யபாரதியின் வீட்டுக்கு சேலம் கியூ பிராஞ்ச் போலீஸார் எனக் கூறிக் கொண்டு சிலா், அவரது தந்தையிடம் சில தகவல்களை கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரது கணவா் கோபாலையும் மிரட்டினா்.

பின்னா் திவ்யபாரதியை வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்ததாகவும், அவருக்கு ஆதரவாக வழக்குரைஞா்கள் போலீஸாருடன் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

காவல் துறையினரின் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. ஒருவரது கருத்து சுதந்திர உரிமையில் போலீஸார் தலையிடுவதை ஏற்க முடியாது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வீட்டை சோதனை இடுவதும் ஒருவரை விசாரணைக்கு அழைப்பதும் சட்டமீறலாகும். எனவே போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com