விவசாய மேம்பாட்டுக்கு ரூ. 1 கோடி ரூபாய் வழங்கியது ஏன்: நடிகர் சூர்யா பதில்

ஒரு விவசாயியைக் கொண்டு வருவது கடினமான விஷயமாக உள்ளது. இந்தப் படம் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம்...
விவசாய மேம்பாட்டுக்கு ரூ. 1 கோடி ரூபாய் வழங்கியது ஏன்: நடிகர் சூர்யா பதில்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி.

இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடித்துள்ளார்கள். 

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார் நடிகர் சூர்யா. இதற்கான காசோலையை நெல் ஜெயராமன் உள்ளிட்ட விவசாயிகள் பெற்றுக்கொண்டார்கள். சூர்யாவின் அகரம் அமைப்பின் மேற்பார்வையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்பிறகு, பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா பேசியதாவது:

இயக்குநர் பாண்டிராஜைத் தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்து வெற்றி படமாகக் கொடுத்திருக்க முடியாது. பிளாக் பஸ்டர் மேடையை நான் பார்த்தே வெகுநாளாகிவிட்டது. இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம், சினிமாவின் மூலம் கண்டிப்பாக நல்ல செய்திகள் பலவற்றைச் சொல்ல முடியும் என்று நிருபித்துள்ளது. 

இங்கே நமது தமிழ்நாட்டில் நிறைய மருத்துவர்கள், என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர். ஆனால் ஒரு விவசாயியைக் கொண்டு வருவது கடினமான விஷயமாக உள்ளது. இந்தப் படம் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்புதான். எங்களை விட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான். அதனால்தான் ரூபாய் ஒரு கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும், ஆனால் நாங்கள் 2டி மூலம் மக்களுக்குக் கருத்து சொல்லும் பொழுதுபோக்குப் படங்களைத்தான் எடுப்போம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com