திரைப்பட விருது விழாவுக்கு மோகன்லால் சிறப்பு விருந்தினரா?: மாநில அரசின் முடிவுக்கு மலையாள நட்சத்திரங்கள் எதிர்ப்பு!

ருது விழாவுக்கு மோகன்லால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதற்குக் கேரள திரைப்பட நட்சத்திரங்கள்...
திரைப்பட விருது விழாவுக்கு மோகன்லால் சிறப்பு விருந்தினரா?: மாநில அரசின் முடிவுக்கு மலையாள நட்சத்திரங்கள் எதிர்ப்பு!

கேரள அரசின் திரைப்பட விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்த விருது விழாவுக்கு மோகன்லால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதற்குக் கேரள திரைப்பட நட்சத்திரங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 

திரைப்பட விருது வழங்கும் விழாவில் பிரபல நடிகரும் அம்மா திரைப்பட சங்கத்தின் தலைவருமான மோகன்லால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ், ஷ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகர்கள் என நூறு பேர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். 

திரைப்பட நட்சத்திரங்களுக்கு மாநில அரசு தரும் விருது மிகவும் உயர்ந்ததாகும். மிகவும் எளிமையான முறையில் முதல்வர் கையால் விருது வழங்கப்படவேண்டும். முதல்வர், விருது வெற்றியாளர்களைத் தவிர்த்துவிட்டு சிறப்பு விருந்தினருக்கு முக்கியத்துவம் அளிப்பது சரியல்ல. சிறப்பு விருந்தினரின் படங்களும் போட்டியில் கலந்துகொண்டதால் இது விருது பெறுபவர்களைச் சிறுமைப்படுத்தும் செயலாக இருக்கும். மாநில அரசு வழங்கும் திரைப்பட விருது விழாவில் இதுபோன்ற வழக்கத்தைக் கொண்டுவர வேண்டாம். முதல்வர், துறை அமைச்சர், விருது பெறுபவர்கள் ஆகியோரே விருது விழாவின் சிறப்பு விருந்தினர்களாக இருக்கவேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், மலையாளத் திரைப்பட நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கொச்சியில் நடைபெற்ற ‘அம்மா’ பொதுக்குழுக் கூட்டத்தில் நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். காவல்துறையால் கைதானபோது ‘அம்மா’ அமைப்பு திலீப்பை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியது.  ‘அம்மா’ அமைப்பின் தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட பிறகு, திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டார்.  நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ‘அம்மா’சங்கத்தில் மீண்டும் இணைய திலீப் மறுத்துவிட்டார். இதனால் மோகன்லாலின் முடிவுக்குக் கடும் விமரிசனங்கள் எழுந்தன. இதையடுத்து அரசு விருது விழாவில் மோகன்லால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதற்கும் திரைப்பட நட்சத்திரங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com