‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட இயக்குநரின் அடுத்தப் படத்தை முன்னதாகவே காண விருப்பமா?

ஆகஸ்ட் 3 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தை அதன் வெளியீட்டுக்கு முன்பு சென்னை ரசிகர்களுக்குத் திரையிட்டு...
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட இயக்குநரின் அடுத்தப் படத்தை முன்னதாகவே காண விருப்பமா?

ஆர்யா, சயீஷா நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - கஜினிகாந்த். ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - பாலமுரளி பாலு. ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இதற்கு முன்பு இயக்கியுள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார். 

இந்நிலையில் ஆகஸ்ட் 3 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தை அதன் வெளியீட்டுக்கு முன்பு சென்னை ரசிகர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்க படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

அதன்படி, சென்னை ரசிகர்களுக்கென ஒரு போட்டி நடத்தப்படுகிறது. படக்குழுவினரின் கீழே உள்ள 3 கேள்விகளுக்கான விடைகள் உங்களுக்குத் தெரிந்தால் அதனை GhajinikanthContest@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக, இந்தப் போட்டியில் வெற்றி பெறுகிறவர்கள், ஆகஸ்ட் 3-க்கு முன்பே சிறப்புக் காட்சியில் கஜினிகாந்த் படத்தைக் குடும்பத்துடன்  காண வாய்ப்பு கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com