சீனாவில் வெளியான டாய்லெட் ஹீரோ: முதல் நாளன்று நல்ல வசூல்!

சீனாவில் வெளியான இந்தியப் படங்களில் முதல் நாள் கிடைத்த வசூலின் அடிப்படையில்...
சீனாவில் வெளியான டாய்லெட் ஹீரோ: முதல் நாளன்று நல்ல வசூல்!

அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த வருடம் வெளியான டாய்லெட் ஏக் பிரேம் கதா (Toilet Ek Prem Katha) படத்தை ஸ்ரீ நாராயண் சிங் இயங்கியுள்ளார். இப்படத்தில் பூமி பெட்னேகர், அனுபம் கெர் போன்றோர் நடித்துள்ளார்கள்.

தூய்மை இந்தியா என்கிற ஸ்வ்ச் பாரத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 2019-க்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லாத சுகாதாரமான சமூகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேச மேம்பாட்டுக்கும், வீணாகும் குப்பைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.

இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த பிரதமர் மோடி கூறியதாவது: தூய்மை குறித்த கூடுதல் விழிப்புணர்வை அக்‌ஷர் குமாரின் படம் ஏற்படுத்துகிறது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக இந்தியாவிலுள்ள 125 கோடி மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். இதனால் இந்தப் படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைத்தது.

டாய்லெட் ஏக் பிரேம் கதா படம் வெளியான முதல் 8 நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்தது. ரூ. 18 கோடியில் உருவான இந்தப் படம் ரூ. 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனைகளைப் படைத்ததால் தற்போது சீனாவிலும் வெளியாகியுள்ளது. 

நேற்று, டாய்லெட் ஹீரோ என்கிற பெயரில் இந்தப் படம் சீனாவில் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக ஹிந்திப் படங்கள் சீனாவில் நல்ல வசூலைப் பெறுவதால் இந்தப் படமும் இந்தியாவில் வசூலித்ததுபோல சீனாவிலும் வசூலில் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டாய்லெட் ஹீரோ படம் முதல் நாளன்று ரூ. 15.94 கோடி வசூலித்துள்ளது. சீனா பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் முதல் வாரமே 2-ம் இடம் பிடித்துள்ளது. இதுவரை சீனாவில் வெளியான இந்தியப் படங்களில் முதல் நாள் கிடைத்த வசூலின் அடிப்படையில் டாய்லெட் ஹீரோ, 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து சீன ரசிகர்களுக்கு அக்‌ஷய் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com