65-ஆவது ஃபிலிம் ஃபேர் விழாவில் விருதுகளை வாரி குவித்த விக்ரம் வேதா, பாகுபலி-2

65-ஆவது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 
65-ஆவது ஃபிலிம் ஃபேர் விழாவில் விருதுகளை வாரி குவித்த விக்ரம் வேதா, பாகுபலி-2

65-ஆவது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இதில் தமிழில் விக்ரம் வேதா மற்றும் தெலுங்கில் பாகுபலி-2 ஆகிய திரைப்படங்கள் விருதுகளை வாரிக் குவித்தது. அதிலும் பாகுபலி-2 படம் 8 விருதுகளை அள்ளியது. விக்ரம் வேதா 4 விருதுகளை வென்றது. 

தமிழில் நயன்தாரா, அதிதி பாலன், மாதவன், கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகளை வென்றனர்.

தமிழில் ஃபிலிம் ஃபேர் விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:

  • சிறந்த திரைப்படம் - அறம்
  • சிறந்த இயக்குநர் - புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா)
  • சிறந்த நடிகர் (க்ரிடிக்ஸ்) - கார்த்தி (தீரன் அதிகாரம் ஒன்று), ஆர்.மாதவன் (விக்ரம் வேதா)
  • சிறந்த நடிகை (க்ரிடிக்ஸ்) - அதிதி பாலன் (அருவி)
  • சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (விக்ரம் வேதா)
  • சிறந்த நடிகை - நயன்தாரா (அறம்)
  • சிறந்த துணை நடிகர் - பிரசன்னா (திருட்டுப்பயலே 2)
  • சிறந்த துணை நடிகை - நித்யா மேனன் (மெர்சல்)
  • சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் (மெர்சல்)
  • சிறந்த பாடலாசிரியர் - வான் (காற்று வெளியிடை)
  • சிறந்த அறிமுக நடிகர் - வசந்த் ரவி (தரமணி)
  • சிறந்த பின்னணிப் பாடகர் - அனிருத் ரவிச்சந்தர் (யாஞ்சி - விக்ரம் வேதா)
  • சிறந்த பின்னணிப் பாடகி - சாஷா திரிபாதி - (வான் வருவான் - காற்று வெளியிடை)

மலையாளம் - ஃபிலிம் ஃபேர் விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:

சிறந்த படம் - தொண்டிமுதலும் த்ரிசாக்‌ஷியும்
சிறந்த இயக்குநர் - திலீஷ் போத்தன்
சிறந்த நடிகர் - ஃபகத் ஃபாசில்
சிறந்த நடிகர் (விமரிசகர் தேர்வு) டொவினொ தாமஸ்
சிறந்த நடிகை - பார்வதி
சிறந்த நடிகை (விமரிசகர் தேர்வு) - மஞ்சு வாரியர்
சிறந்த குணசித்திர நடிகர் - அலென்சியர்
சிறந்த குணசித்திர நடிகை - சாந்தி கிருஷ்ணா
சிறந்த இசையமைப்பாளர் - ரெக்ஸ் விஜயன்
சிறந்த பாடலாசிரியர் - அன்வர் அலி
சிறந்த பின்னணி பாடகர் - ஷபாஸ் அமன்
சிறந்த பின்னணி பாடகி - கே.எஸ்.சித்ரா

கன்னடம் - ஃபிலிம் ஃபேர் விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:

சிறந்த படம் - ஒண்டு மொத்தயே கதே
சிறந்த இயக்குநர் - தருண் சுதிர்
சிறந்த நடிகர் - புனித் ராஜ்குமார்
சிறந்த நடிகர் (விமரிசகர் தேர்வு) தனஞ்ஜெயா
சிறந்த நடிகை - ஸ்ருதி ஹரிஹரன்
சிறந்த நடிகை (விமரிசகர் தேர்வு) - ஷரத்தா ஸ்ரீநாத்
சிறந்த குணசித்திர நடிகர் - ரவிஷங்கர்
சிறந்த குணசித்திர நடிகை - பவானி பிரகாஷ்
சிறந்த இசையமைப்பாளர் - பி ஜே பரத்
சிறந்த பாடலாசிரியர் - வி.நரேந்திர பிரசாத்
சிறந்த பின்னணி பாடகர் - அர்மான் மாலிக்
சிறந்த பின்னணி பாடகி - அனுராதா பட்

வாழ்நாள் சாதனையாளர் விருது - சத்யநாராயணா

சிறந்த புதுமுக நாயகன் விருதுகள் : வசந்த் ரவி, ஆண்டனி வர்கீஸ்

சிறந்த புதுமுக நாயகி விருதுகள் : கல்யாணி பிரியதர்ஷன், ஐஸ்வர்யா லெட்சுமி

சிறந்த புரொடக்‌ஷன் டிசைன் - சாபு சிறில்
சிறந்த ஒளிப்பதிவாளர் - கே கே செந்தில் குமார்
சிறந்த நடன இயக்குநர் - சேகர் வி ஜே

தெலுங்கில் பாகுபலி-2 திரைப்படம் 8 விருதுகளை வென்றது. அதன் விவரம் பின்வருமாறு:

  • சிறந்த இயக்குநர் - ராஜமௌலி
  • சிறந்த திரைப்படம் - பாகுபலி-2
  • சிறந்த துணை நடிகர் - ராணா டகுபதி
  • சிறந்த துணை நடிகை - ரம்யா கிருஷ்ணன்
  • சிறந்த இசையமைப்பாளர் - எம்.எம் கீரவாணி
  • சிறந்த பாடலாசிரியர் - எம்.எம்.கீரவாணி
  • சிறந்த ஒளிப்பதிவாளர் - கே.கே.செந்தில் குமார்
  • சிறந்த தயாரிப்பு நிர்வாகி - சாபு சிரில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com