விரைவில் வெளியாகவிருக்கும் இந்த 4 படங்கள் கோலிவுட் ரேஸில் போட்டியிடுகின்றனவா?

அண்மையில் வெளியான ‘காலா’, ‘ஸ்கெட்ச்’ மற்றும் ‘இரும்புத்திரை’ தவிர வேறெந்த முன்னணி ஹீரோக்களின்
விரைவில் வெளியாகவிருக்கும் இந்த 4 படங்கள் கோலிவுட் ரேஸில் போட்டியிடுகின்றனவா?

அண்மையில் வெளியான ‘காலா’, ‘ஸ்கெட்ச்’ மற்றும் ‘இரும்புத்திரை’ தவிர வேறெந்த முன்னணி ஹீரோக்களின் படங்களும் இந்த ஆண்டின் முதற் பகுதியில் வெளியாகவில்லை. பொங்கல் ரிலீஸாக சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் வெளியானது. அதன் பின் தென்னிந்திய திரையுலகத்தின் ஸ்ட்ரைக் காரணமாக பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகாமல், 2018-ம் ஆண்டின் முதல் பாதி முழுக்க சுவாரஸ்யமின்றி இருந்தது.

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் விதமாக மூன்று பெரிய படங்கள் வெளியாகவிருக்கிறது. அவை, விஜய் சேதுபதியின் ‘ஜூங்கா’, கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ ஆகியவை. இவைத் தவிர சிவாவின் ‘தமிழ்ப்படம் 2’ ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்தப் படம் இந்த வருடத்திலேயே சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் என சொல்லுமளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களையும், முன்னனி ஹீரோக்களையும், அரசியல் தலைவர்களையும் இப்படத்தில் கலாய்த்து இருக்கிறார்கள், எப்படி எல்லாம் கலாய்த்துள்ளார்கள் என்பதைப் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்கள்.

'விவேகம்' பட கிளைமாக்ஸ் பாடல், 'ஆம்பள' படத்தில் சுமோ பறக்கும் காட்சி முதல் மெர்சல், விக்ரம் வேதா, துப்பறிவாளன், வேலையில்லா பட்டதாரி, துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களை விதவிதமாக, டிசைன் டிசைனாக கலாய்த்துள்ளனர் எனத் தெரிகிறது. படத்தின் டீசஸரிலேயே தமிழக அமைச்சர்கள் முதல் விஜய் மல்லையா வரை சிலரைக் கலாய்த்திருக்கிறார்கள். இது போதாதென்று அமெரிக்க அதிபர் ட்ரம்பையும் கூட விட்டு வைக்காமல் தங்கள் படத்தின் விளம்பரத்திற்காக வித்யாசமாகப் பயன்படுத்தி உள்ளனர் இப்படக் குழுவினர்.

ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட சில சர்வதேச தலைவர்களுடன் சற்று வேடிக்கையான போஸில் உட்கார்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படம், சமூக வலைத்தளங்களில் ட்ரால் செய்து பகிரப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட, அதே போஸில் சிவா அமர்ந்து ஹீரோயினுடன் பேசும் ஒரு படத்தை ‘தமிழ்ப் படம் 2.0’ குழுவினர் வெளியிட்டு வைரல் ஆக்கிவிட்டனர். ஜூலை மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும், நாளுக்கு நாள் ரசிகர்களிடையே கூடிக் கொண்டே போகிறது.

இப்படி நான்கு வெவ்வேறு ஜானர் படங்கள் வரிசை கட்டி ரிலீசுக்குத் தயாராக இருப்பதால், சினிமா ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு கோலிவுட்டில் இப்படி ஒரு ரேஸ் உருவாகியிருப்பது தியேட்டர் உரிமையாளர்களிடையேயும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com