‘தெலுங்கு பிக் பாஸை’ விடவும் ‘தமிழ் பிக் பாஸ்’ நிகழ்ச்சியை ரசிகர்கள் நெருக்கமாக உணர்வது ஏன்?

இரு நிகழ்ச்சிகள் குறித்த ஒப்பீட்டில் இந்த அம்சத்தால் தமிழ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு நெருக்கமாக உள்ளதாக...
‘தெலுங்கு பிக் பாஸை’ விடவும் ‘தமிழ் பிக் பாஸ்’ நிகழ்ச்சியை ரசிகர்கள் நெருக்கமாக உணர்வது ஏன்?

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸை விடவும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் மனத்துக்கு நெருக்கமாக உள்ளதாகக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

இதன் முக்கியக் காரணமாக இருப்பது, தமிழ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான முகங்கள் இடம்பெற்றதுதான். தமிழ் பிக் பாஸ் போட்டியாளர்களில் சிலரைத் தவிர மற்ற எல்லோருக்கும் அறிமுகம் தேவையில்லை. அந்தளவுக்குப் பிரபலமானவர்கள். ஆனால் தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்நிலை இல்லை. 

இம்முறை தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களில் பலரை யாருக்கும் தெரியவில்லை என்கிற மனக்குறை ரசிகர்களிடம் எழுந்துள்ளது. பானுஸ்ரீ, ரோல் ரிடா, கெளஷல், தீப்தி சுனைனா, கணேஷ், சஞ்சனா, நந்தினி, நுதன் போன்றோர் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகாதவர்கள். நிகழ்ச்சியின் முதல் நாளன்றுதான் ரசிகர்கள் இவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். இதனால் பிரபலங்கள் இல்லாத ஒரு பிக் பாஸாக தெலுங்குப் பதிப்பு உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 

ஆனால் தமிழில் பெரும்பாலான போட்டியாளர்கள் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். எனினும் தமிழ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் டேனியல், நித்யா பாலாஜி, சாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகிய நான்கு பேரும் இந்நிகழ்ச்சி மூலமாகவே ரசிகர்களிடம் அறிமுகமாகியுள்ளார்கள்.

தெலுங்கு பிக் பாஸ் குறித்து எழுதப்படும் இணையத்தளங்களில் இரு நிகழ்ச்சிகள் குறித்த ஒப்பீட்டில் இந்த அம்சத்தால் தமிழ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு நெருக்கமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவரும் எதிர்பார்க்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி, ஜூன் 17 முதல் ஆரம்பமாகியுள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தின் அனைத்து நாள்களிலும் தினமும் இரவு 9 மணிக்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாள்கள் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையைப் பெற்றார்.

இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றன.

*

தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெறும் 16 போட்டியாளர்களின் பட்டியல்:

1. கீதா மாதுரி (பாடகி)

2. அமித் திவாரி (நடிகர்)

3. தீப்தி நல்லமொது (டிவி9 தொகுப்பாளர்)

4. தனிஷ் (நடிகர்)

5. பாபு கோகினேனி (விமரிசகர்)

6. பானு ஸ்ரீ (நடிகை)

7. ரோல் ரிடா (ராப் பாடகர்)

8. ஷ்யாமளா (நடிகை)

9. கிரீத்தி தமாராஜூ (நடிகர்)

10. தீப்தி சுனைனா (டப்ஸ்மாஷ் கலைஞர்)

11. கெளசல் (நடிகர்)

12. தேஜஸ்வி (நடிகை)

13. சம்ரத் ரெட்டி (நடிகர்)

14. கணேஷ் (ஆர்ஜே)

15. சஞ்சனா அண்ணே (மாடல்)

16. நுதன் நாய்டு (சாமானியர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com