இது பிக் பாஸா அல்லது சொல்வதெல்லாம் உண்மையா? குடும்பப் பிரச்னையை அளவுக்கு மீறி மையப்படுத்தும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி!

நித்யாவின் நடவடிக்கைகளை அவருடைய குடும்பப் பிரச்னையை வைத்தே மதிப்பிடுகிறார்கள்...
இது பிக் பாஸா அல்லது சொல்வதெல்லாம் உண்மையா? குடும்பப் பிரச்னையை அளவுக்கு மீறி மையப்படுத்தும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி!

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி (44), தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவருடைய மனைவி நித்யா (31). 9 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். போஷிகா என்கிற 7 வயது பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் கடந்த வருட மே மாதத்தில் நித்யா, பாலாஜி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன் கணவர் தனது ஜாதியைச் சொல்லித் திட்டுவதாகவும் கொடுமைப்படுத்துவதாகவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார் நித்யா. 

இந்நிலையில் பாலாஜி, நித்யா ஆகிய இருவருமே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள். இதனால் இந்நிகழ்ச்சியில் இருவருடைய பிரச்னைகளுக்கும் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்று சிலரும் இதனால் பிரச்னைகள் மேலும் பெரிதாக வாய்ப்புண்டு என்று சிலரும் கருதுகிற நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க இவர்களை மையமாக வைத்து நகர்வதாகப் பார்வையாளர்கள் பலரும் புகார் கூறுகிறார்கள். 

உதாரணமாக நேற்று காண்பித்த நிகழ்ச்சி முழுக்கவே பாலாஜி - நித்யா இருவருடைய குடும்பப் பிரச்னையை மையமாக வைத்தே நகர்ந்தது.

சமையலின்போது பாலாஜி வைத்த ஒரு கோரிக்கையை நித்யா மறுக்க, அதை வைத்தே ஒரு பெரிய பிரச்னை உருவானது. மேலும் பாலாஜியிடம் பேசுபவர்கள் அனைவருமே அவருடைய குடும்பப் பிரச்னையைக் குறித்தே பேசுகிறார்கள். சுற்றியும் கேமராக்கள் உள்ளதால் யாரிடமும் வெளிப்படையாகப் பேசாமல், அதேசமயம் தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார் பாலாஜி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாலாஜிக்கு அறிவுரை கூறுகிறார்கள். பெண்கள் பலரும்கூட தங்கள் பங்குக்கு பாலாஜிக்கு அறிவுரை சொல்கிறார்கள். அதேபோல நித்யாவின் நடவடிக்கைகளை அவருடைய குடும்பப் பிரச்னையை வைத்தே மதிப்பிடுகிறார்கள்.  இப்படி நிகழ்ச்சி முழுக்க பாலாஜி - நித்யா பிரச்னையைச் சுற்றியே நடக்கிறது.

இதனால் அளவுக்கு மீறி இருவருடைய பிரச்னைகளும் விவாதிக்கப்படுவதாகப் பார்வையாளர்களும் பலரும் கருதுகிறார்கள். ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில்தான் இதுபோல குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படும். இப்போது அதே பாணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் மாறிவிட்டதா என்கிற விமரிசனங்களை சமூகவலைத்தளங்களில் காணமுடிகிறது. 

மாற்றம் வேண்டும் பிக் பாஸ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com