இயக்குநர் மணி ரத்னத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

பெங்களூர் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் மற்றும் கர்நாடக அரசு இணைந்து இந்த ஆண்டு முதல் திரை வல்லுநர்களுக்கு
இயக்குநர் மணி ரத்னத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

பெங்களூர் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் (Bengaluru International Film Festival (BIFFES) மற்றும் கர்நாடக அரசு இணைந்து இந்த ஆண்டு முதல் திரை வல்லுநர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ அளிக்க முடிவெடுத்துள்ளன. இதன் முதல் விருது இயக்குநர் மணிரத்னத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது 10 லட்ச ரூபாய் ரொக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசை உள்ளடக்கியது. இன்று நடைபெறும் விழாவில் இந்தப் பரிசு வழங்கப்பட இருக்கிறது. கர்நாடக மாநில முதல்வர் சித்தாராமையா இந்தப் பரிசை வழங்குகிறார்.

இயக்குநர் மணிரத்னம் தற்போது ‘செக்கச் சிவந்த வானம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இயக்குநர் மணி ரத்னத்தின் முதல் படம் பல்லவி அனுபல்லவி எனும் கன்னடப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com