பழம்பெரும் இந்தி நடிகை ஷம்மி மறைவு: அமிதாப் பச்சன் ட்விட்டரில் இரங்கல்!

கதாநாயகியாக அறிமுகமாகி டெலிவிஷன் நடிகையாகத் தனது காலத்தை முடித்துக் கொண்டவரான ஷம்மி ஆண்ட்டியின் மறைவுக்கு அமிதாப் பச்சன் ட்விட்டர் மூலமாகத் தனது இரங்கலைப் பதிவு செய்திருந்தார்.
பழம்பெரும் இந்தி நடிகை ஷம்மி மறைவு: அமிதாப் பச்சன் ட்விட்டரில் இரங்கல்!

இந்தித் திரையுலகில் ஷம்மி ஆண்ட்டி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும், கொண்டாடப் படும் ஷம்மி இன்று மறைந்தார். அவருக்கு வயது 89. ஹுடா கவா, ஹம், தி பர்னிங் டிரெயின் உள்ளிட்ட இந்தித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ஷிரின் ஃபர்ஹாத் கி தோ நிகல் பாடி’ எனும் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

திரைப்படங்களைக் காட்டிலும் தான் நடித்த இந்தி மெகாத் தொடரான தேக் பாய் தேக், ஜபான் சம்பல் கி,  ஸ்ரீமன் ஸ்ரீமதி, கபி யே கபி ஓ, ஃபில்மி சக்கர் உள்ளிட்ட தொடர்கள் மூலம் அவர் மிகப்பிரபலமாக அறியப்பட்டிருந்தார். கதாநாயகியாக அறிமுகமாகி டெலிவிஷன் நடிகையாகத் தனது காலத்தை முடித்துக் கொண்டவரான ஷம்மி ஆண்ட்டியின் மறைவுக்கு அமிதாப் பச்சன் ட்விட்டர் மூலமாகத் தனது இரங்கலைப் பதிவு செய்திருந்தார்.

அமிதாப்பின் இரங்கல்...

பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் சகோதரியும், பழம்பெரும் இந்தி நடிகை நர்கீஸின் மகளுமான ப்ரியா தத், ஷம்மி ஆண்ட்டிக்கு ட்விட்டரில் தெரிவித்த இரங்கல்...

ப்ரியாதத் தனது தாயார் நர்கீஸுடன், ஷம்மி இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அவருடனான பழைய இனிமையான நினைவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.

வயோதிகம் காரணமாகவும், நீண்ட கால உடல்நலக் குறைபாடு காரணமாகவும் மறைந்த ஷம்மி ஆண்ட்டி இந்தித் திரைப்பட உலகில் தனது இனிய சுபாவத்தின் காரணமாகப் பலரது நட்புக்குரியவராக இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com