விமானப் பயணங்களில் ராதிகா ஆப்தேவுக்கு வந்த சங்கடம்? 

ஆனால், நடுவில் சில முறை ராதிகா ஆப்தேவை விமானப் பயணங்களின் போது எகனாமிக் கிளாஸ் (சிக்கன வகுப்பு) இருக்கைகளில் காண நேர்ந்த அவரது ரசிகர்களுக்குத் தான்  ‘ஷாக்கோ ஷாக்’
விமானப் பயணங்களில் ராதிகா ஆப்தேவுக்கு வந்த சங்கடம்? 

நடிகை ராதிகா ஆப்தேவுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டில் ப்ரிட்டிஷ் இசையமைப்பாளர் பெனிடிக்ட் டெய்லர் என்பவருடன் திருமணமாகி விட்டது.  திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்காக ராதிகா இந்தியாவிலும் அவரது கணவர் இசை வாய்ப்புக்களுக்காக லண்டனிலும் வாழ வேண்டிய நிர்பந்தம். ஆனாலும், இவர்கள் இருவரும் தொழில் வேறு, குடும்பம் வேறு என்பதில் தெளிவாக இருப்பதால். தங்களை ஒரே இடத்தில் இருக்க அனுமதிக்காத தத்தமது வேலைகளின் மீது இருவருக்குமே எந்தவிதமான குறைகளும் இல்லை. மாறாக, குறைந்த பட்சம் மாதம் ஒருமுறையாவது கணவரைத் தேடி இந்தியாவிலிருந்து ராதிகா ஆப்தே லண்டனுக்கோ அல்லது மனைவியைத் தேடி கணவர் இந்தியாவுக்கு வந்து விடுவதால் இவர்களது குடும்ப வாழ்வில் எந்தத் தடங்கல்களும் இல்லை. இருவருமே தங்களது திருமண வாழ்வை வெகு இனிமையாகக் கொண்டாட்டத்துடன் வாழ்ந்து தீர்க்கிறார்கள் என்றும் சொல்லலாம். 

ஆனால், நடுவில் சில முறை ராதிகா ஆப்தேவை விமானப் பயணங்களின் போது எகனாமிக் கிளாஸ் (சிக்கன வகுப்பு) இருக்கைகளில் காண நேர்ந்த அவரது ரசிகர்களுக்குத் தான்  ‘ஷாக்கோ ஷாக்’ இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், ஆங்கிலம் என ராதிகா நடிக்காத மொழிகளே இல்லை. அப்படி ஓடி, ஓடிச் சம்பாதிக்கும் நடிகை, தான் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு பிஸினஸ் கிளாஸில் பயணிக்கக் கூடாது? ஏன் எகனாமிக் கிளாஸ் இருக்கை? என அவரிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். 

அதற்கு ராதிகா அளித்த பதில்;

மை டியர் ஃபேன்ஸ்... என்னை எகனாமிக் கிளாஸ் இருக்கைகளில் கண்டால் ஆச்சர்யப் படாதீர்கள். எனது வெகு தூரத்து திருமண பந்தத்துக்கு நான் தரும் மரியாதை அது. கணவரும், நானும் மாற்றி, மாற்றி மாதம் ஒரு முறையாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருப்பதால் வருடத்திற்கு எங்களுக்கு விமானப் பயணங்களுக்கு மட்டுமாக எவ்வளவு செலவாகும்? என்று யோசித்துப் பாருங்கள். அதெல்லாம் கட்டுப்படியாகாது. அதிலும் சமீபத்தில் 3 முறை கடைசி நேரத்தில் விமான டிக்கெட்டுகளை புக் செய்ய வேண்டியதாகி விட்டது. அப்படியானால் எவ்வளவு செலவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதனால் தான் சிக்கன நடவடிக்கையாக எகனாமிக் கிளாஸ் இருக்கைகளைத் தேர்ந்தெடுத்து விட்டேன். என்றிருக்கிறார்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் மிக வெளிப்படையாக தங்கு தடையின்றி பேசக்கூடியவரான ராதிகே ஆப்தேவின் இந்த பதில் அவரது ரசிகர்களுக்கு அவரது வாழ்வியல் சூழல் பற்றி இப்போது புரிய வைத்திருக்கக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com